பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 70 I அப்படி இருந்தும் வழக்கை விசாரித்த ஊர்ப் பஞ்சாயத்துக்காரர் கள் கையில் உள்ள ஆவணத்தின்படித் தீர்ப்பு வழ்ங்கினரேயன்றித் தெரிந்தவர் தெரியாதவர் பிரச்சினைக்கு இட்ம் கொடுக்கவே இல்லை. இதனைச் சேக்கிழார் மிக அழகாக எடுத்துக் காட்டு கிறார். வழக்கை விசாரித்துக் கையிலுள்ள ஆவணம் நம்பியா ரூரரின் பாட்டன் தந்ததுதானா? என்பதை அறிந்துகொள்ள முயன்றுள்ளனர். அவருடைய கையெழுத்தை ஒத்திட்டுப் பார்ப்பதற்காக அவர் கையெழுத்துடைய மற்றோர் ஒலையை 'அரண்தரு காப்பில் வரவழைத்து ஒத்திட்டுப் பார்த்த பின்னர், 'நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரர்! தோற்றீர்! பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க மேன்மையோர் விளம்ப...... * 37 இவ்வாறு சிறந்த முறையில் தீர்ப்பை வழங்கிவிட்டனர். தீர்ப்பை வழங்கிய பிறகு சாதாரண மனிதர்கள் என்ற நிலையில் நின்று, 'அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமைசேர் பதியே யாகப் பேசியது உமக்கு ಇನ್ದಣ್ಣಗಿತು வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டு.....' என்று கேட்டார்களே தவிர வழக்கின் தீர்ப்பைக் கூறுவதற்கு உள்ளூரார், தெரிந்தவர், தெரியாதவர் என்ற வேறுபாடுகள் முன்னே நிற்கவில்லை என்பதைக் கவிஞர் அறிவுறுத்துகின்றார். இயற்பகையார் செய்த செயலைத் தாங்கிக்கொள்ள முடியாத சுற்றத்தார் வேதியனை வழிமறித்துத் தண்டிக்க முனை கின்றார். - 'இனையதொன்று யாரே செய்தார்? இயற்பகை பித்தனானால் புனையிழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்: ' என்று கூறிக்கொண்டு போர்க் கருவிகளுடன் சண்டையிட வந்தனர் என்று கூறுகையில் ஒர் உண்மையைக் கவிஞர் தெரிவிக்க விரும்புகிறார். தொண்டர்கள் இறையன்பில் ஈடுபட்டுச் சமுதாயம் ஏற்காத செயலைச் செய்ய முனைந்தால், அவர்கள் தொண்டர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் சமுதாயம் விட்டுக் கொடுப்பதில்லை என்பதையும் அறியவேண்டும். சண்டேசுரர் எனப் பின்னர்ப் பெயர் பெற்ற விசார சருமர் என்ற இளைஞர் சேய்ஞ்ஞலூரில் உள்ள வேதியர்களின் பசுக்க ளைத் தாமே மேய்ப்பேன் என்று கூறியவுடன் அவருடைய