பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 02 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தந்தையின் அனுமதியைக்கூடக் கேட்க வேண்டும் என்று கருதா மல் உடனே அதற்கு ஒத்துக் கொண்டனர் அவ்வூர் வேதியர்கள். ஆனால் பசுக்கள் தாமே பொழியும் பாலை எடுத்து அந்தச் சிறிய பெருந்தகையார் சிவலிங்கத்திற்கு அபிடேகஞ் செய்கிறார் என்பதைக் கேள்வியுற்ற மறையவர்கள் உடனே அச் சிறுவனின் தந்தையாகிய எச்சதத்தனை அழைத்து, 'அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்கள் ஆனவெலாம் சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல் கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலிற் கறந்து பாலுகுத்து வந்த பரிசே செய்கின்றான் என்றான்' என்று வாய் மொழிந்தார் " என்று பாடுகிறார். 'இலவசமாக மாடுகளை மேய்ப்பேன்’ என்று சிறுவர் கூறியவுடன் அவர் தந்தையைக்கூடக் கேட்காமல் சரி, என்று ஏற்றுக்கொண்ட வேதியர்கள், இப்பொழுது மட்டும் அவர் தந்தையை அழைத்துக் குறை கூறுவது ஏன்? வாய் மொழிந்தார்’ என்ற சொல்லுக்கு உண்மை கூறினர் என்பது பொருள். ஆனால் சேக்கிழார் இப்பொருளுக்கு நேர்மாறான பொருளில் இதனைக் கூறுகிறார். நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ளக்கூட முயலாமல் யாரோ ஒருவன் வந்து கோள் மூட்டியதை நம்பி இவ்வாறு கூறுகிறவர்கள் வேதம் ஒதும் வேதியர்கள். எனவே அவர்களை எள்ளி நகையாடும் முறையில் கவிஞர் வேதம் ஒதும் நாவால் பொய் புகன்றார்கள் என்று வெளிப்படையாகக் கூறாமல் வாய் மொழிந்தார் என்று கூறிச் செல்கின்றார். புறக்கோல அளவில் வேள்வி முதலிய சடங்கு களை விடாமற் செய்யும் வைதிகர்கள் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதற்கு இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டாகும். திருநாவுக்கரசர் புராணத்தில் அந்நாளைய மகளிர் எவ்வாறு தம் வாழ்க்கையை நடத்தினர் என்பதையும் நுண்மையாகக் காட்டிச் செல்கின்றார். தம்பியார் உயிர்வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் உயிரை வைத்திருந்தார் திலகவதியார். அத்தகைய தம்பியார் இப்பொழுது வேற்றுச் சமயம் புகுந்து விட்டார். அதனால் மனம் நொந்துபோனார் திலகவதியார் என்றால் மிகையாகாது. ஆனால் தம் நோவு காரணமாகத் தம்பியாரை ஏசவோ, கடிந்து கொள்ளவோ செய்யவில்லை. அதற்குப் பதிலாக இறைவனிடம் முறையிட்டுவிட்டு அவன்