பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 0 3 எவ்வாறேனும் தம் குறையைத் தீர்த்து வைப்பான் என்று இருந்துவிட்டார் அம்மாதரசியார். இந்நிலையில் மருணிக் கியாருக்குச் சூலை நோய் கண்டது. மணி, மந்திர, ஒளடதம் என்ற எதனாலும் அதனைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் தமக்கையாரை நினைக்கின்றார் அன்பர், 'பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராக் கொண்டவர்.பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்புணர்த்த "' என்பதனால் தம் நிலையைக் குறிப்பாக அவரிடம் தெரிவிக்குமாறு ஏவலாளனை அனுப்பினாரே தவிர, அவரை வருமாறு அழைக்கவில்லை. இன்றுவரை அவரை மறந்துவிட்டுத் திடீரென்று தமக்கு ஒரு துன்பம் வந்துள்ளபொழுது வந்து காக்க வேண்டும் என்று அழைப்பது பண்புடைமை ஆகாதாகலின் மருணிக்கியார் அதனைச் செய்யவில்லை. தாம் எத்துணைத் துன்பமுற்றாலும், தமக்கையார் தவிரத் தமக்கு வேறு கதியே இல்லை என்றாலும், அவரைப் பிடிவாதமாக அழைத்து வருமாறு கூறுதல் தன்னலத்தின்பாற் பட்டதாகும். எனவேதான் பண்புடைய பெரியார் அதனைச் செய்யவில்லை. அதே நேரத் தில் இத்துணை ஆண்டுகள் கழித்துத் திடீரென்று தமக்கு ஒரு தேவை ஏற்பட்டவுடன் இன்றுவரை மறந்திருந்த தமக்கையா ரிடம் நேரிடையாகத் தாமே போவதும் சரியில்லை. போனால் அவர் ஏற்பாரா மாட்டாரா என்றும் தெரியாது. எனவேதான் குறிப்புணர்த்த அனுப்பினார் என்று பாடுகிறார் கவிஞர். அவர் ஏவலிற் சென்றவன் அம்மையாரைச் சந்தித்து, 'சங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது' எனக் கூறினவுடன் அம்மையார் ‘தீங்குளவோ? என்று கேட்டார். அவன் நடந்ததை விரிவாகக் கூறினான். அதனைக் கேட்ட அம்மையார், - 'என்றவன் முன் கூறுதலும் 'யான் அங்கு உன்னுடன் போந்து நன்றறியா அமண்பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்றவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய - - அவன் அப்படியே சென்று கூறிவிட்டான். இங்கும் பண்பாட்டைக் காண்கிறோம். எந்தத் தம்பியார் உளராக வேண்டும் என்று