பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 0.4 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு உயிரை வைத்திருக்கின்றாரோ அந்தத் தம்பியார் சாவுடன் போராடும் இந்த நேரத்திலும் தம் கொள்தையினின்று இறங்கிவர அந்த அம்மையார் தயாராக இல்லை. தம்பியை இங்கு வரச் சொல் என்றும் அவர் கூறவில்லை! ஏன்? ஒரு வேளை அவராக வர விருப்பம் இல்லாதவராக இருந்திருப்பின் தம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வர நேரிடலாம்! அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையைத் தம்பியாருக்கு உண்டாக்க அம்மையார் விரும்பவில்லை. எனவேதான் நான் அங்கு வரமாட்டேன் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்கிறார். இவ்வாறு கூறிவிட்டால் வருவதும் வராததும் தம்பியார் தாமே முடிவு செய்து கொள்ள இடம் கொடுத்ததாகவும் ஆகிவிடும். பிறர் பற்றிய செயல்களில் தம் விருப்பு வெறுப்புகட்கு இடம் தராமல் அவர்கள் விருப்பப்படி செய்யுமாறு விட்டுவிடுவதே பண்புடைமையாகும். இந்த அளவு பிறர் முடிவுகளில் தலையிடா மல் பண்பாட்டுடன் நடந்துகொள்ளும் இயல்புடைய மக்களையும் சேக்கிழார் அறிமுகஞ் செய்து வைக்கின்றார். காப்பியத்தைத் திறனாய்வு செய்கின்ற முறையில் இவை எல்லாம் பாத்திரப் படைப்பு என்ற தலைப்பினுள் அடங்குமேனும் பெரியபுராணத்தைப் பொறுத்தமட்டில் காப்பியப் பாத்திரங்கள் படைப்புக்குரிய இலக்கணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனைய காப்பியங்களில் பாத்திரங்களைப் படைக்கின்ற கவிஞனுக்குத் தன் விருப்பம் போல் அவர்களைப் படைக்கவும், செயல்படுத்தவும் உரிமை உண்டு. சிலம்பு போன்ற காப்பியத்தில்கூட இளங்கோவுக்கு இந்த உரிமை பெரிய அளவிற்கு இருந்தது. ஆனால் சேக்கிழாருக்கு அந்த உரிமை சிறிதும் இல்லாமற் போய் விட்டது. பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் மாற்ற முடியாத வரலாற்றுப் பாத்திரங்களாகவும் நிகழ்ச்சிகளாக வும் அமைந்துவிட்டன. எனவே அவர் விருப்பம் போல் பாத்திரங் களைப் படைக்கவோ அவர் விருப்பம் போல் நிகழ்ச்சிகளை அமைக்கவோ ஒரு சிறிதும் இடம் இல்லாமற் போய் விட்டது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பாத்திரங்கள் எவ்வாறு உரையாடின; எவ்வாறு அப்பாத்திரங்களின் எண்ண ஓட்டங்கள் அமைந்தன என்பவற்றை மட்டிலும் அவர் விருப்பம்போல் அமைத்துக் கொள் ளும் உரிமை மட்டுமே அவருக்கிருந்தது என்பதைத் திறனாய்வு செய்பவர் மறந்துவிடக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டுக்குள் நின்று கொண்டு உரையாடல் ஒன்றின் மூலமாகவே பாத்திரங்களின் பண்பாட்டை நாம் அறியுமாறு படைப்பதுதான் சேக்கிழாரின் தனியான ஆற்றலாகும் இந்த உரையாடலை நிகழ்த்திக் காட்டும் பொழுதேகூட அப்பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களையும்