பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 705 ஒரிரண்டு சொற்களினால் விளக்கிச் செல்வது இக்கவிஞருக்குக் கைவந்த கலையாகும். மாபெரும் கவிஞராகவும், புலவராகவும், உலகியல் அறிந்தவராகவும் இருந்ததுடன் ஒப்பற்ற மனவியல் அறிஞராகவும் இருந்தமையாலேயே இத்தனையும் உரையாடல் மூலமாகவே அவரால் செய்ய முடிந்தது. பண்பாட்டின் உறைவிடமாக இருந்த திலகவதியார், மருணிக்கியார் இடை நடந்த நிகழ்ச்சியைக் கூறுமுறையில் அவர்கள் இருவர் பண்பாட்டையும் விளக்கிவிட்ட கவிஞருக்கு வேறு ஒரு வகையான சோதனை வருகிறது. இருவரில் ஒருவர் பண்பாடுடையவராகவும் மற்றவர் சாதாரண உலகியல் நிறைந்த வராகவும் இருப்பின் அங்கு என்ன நிகழும் என்பதைக் காரைக்காலம்மையார் புராணத்தில் எழுதிக் காட்டுகிறார். புனிதவதியார் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடமாய், கற்பு மேம்படு காதலியாராய் இருக்கின்றார். அவருடைய கணவனை அறிமுகஞ் செய்துவைக்கும்பொழுதே கவிஞர் அவன் எத்தகை யவன் என்பதை அறிவித்து விடுகின்றார். புனிதவதியார் என்ற அற்புதமான பெண் தனக்கு மனைவியாக வாய்த்ததற்கு மகிழ்ச்சி அடைந்ததைவிடச் சீர்வரிசை என்ற பெயரில் வந்த பெருஞ் செல்வத்தினால் அவன் மகிழ்ச்சியடைந்தான் என்பதை, 'மகட் கொடையின் மகிழ்சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்ததற்பின் நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும் தகைப்பில் பெருங்காதலினால் தங்குமனை வளம் பெருக்கி " வாழ்ந்தான் என்று கவிஞர் முதலிலேயே கூறிவிடுகிறார். அவன் கடையிலிருந்து அனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை வைத்து மற்றதைப் புனிதவதியார் சிவனடியார் ஒருவருக்கு உணவுடன் படைத்துவிட்டார். கணவன் வந்தவுடன் உணவிட்டு மீதம் உள்ள மாங்கனியை இலையில் இட்டார். 'மனைவியார் தாம்படைத்த மதுரமிக வாய்த்தகனி தனை நுகர்ந்து இனியசுவை ஆராமைத் தார்வணிகன் இனைய தொரு பழம் இன்னம் உளது அதனை இடுக...'" என்று கேட்டு விட்டான். கழிபெருஞ் சுவையுடைய பழத்தைத் தின்ற பிறகு 'நல்லவேளை வந்தவர்கள் இரண்டாகக் கொடுத்