பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 06 பெரியபுராணம் - ஓர் ஆய்வு தனர். மற்றொன்று மனைவிக்கு இருக்கட்டும்' என்று நினையாமல் எஞ்சிய அதனையும் இடுக' எனக் கேட்கின்ற பண்பாளன் அவன். கணவன் ஆணையிட்டதும் அப்படியே அதற்குக் கீழ்ப்படிந்து பழக்கப்பட்ட அம்மையார் அவன் 'இடுக' என்றவுடன் எடுத்துவர உள்ளே சென்று விட்டார். அடியாருக்குப் பழம் இட்டதை மறந்து விட்டமையால் வந்த நெருக்கடியாகும் இது. எடுத்துவருபவர் போல வந்துவிட்டு, மறுபடியும் சென்று 'அடியாருக்கு இட்டு விட்டேன்’ என்று கூறினால் 'என்னைக் கேட்காமல் ஏன் கொடுத்தாய்? என்று வினவும் அளவுக்குப் போகக் கூடிய வியாபாரி அவன். எனவே இறைவனை வேண்டினார்; அவனரு ளால் பழம் ஒன்று வந்தது; கொண்டு வந்து இலையில் இட்டார். அதனை உண்டு அதில் 'உற்றசுவை அமுதினுமேற்பட உளதாயிட இது முன் தரு மாங்கனியன்று; மூவுலகில் பெறற்கு அரிதால் பெற்றது வேறு எங்கு? என்று பெய்வளையார் தமைக் கேட்டான். '" இரண்டு கனிகட்கும் இடையே உள்ள சுவையையும் வேறு பாட்டையும் அறிகின்ற அளவுக்கு உணவில் நுண் அனுபவம் உடையவனாக இருந்தான் என்பதைக் கவிஞர் விளக்கிவிட்டார். இப்பொழுது அம்மையார்பாடு திண்டாட்டமாகிவிட்டது. இறைவன் திருவருளை வெளியிற் கூறக் கூடாது என்பது ஆன்மீக உலகச் சட்டம். ஆனால் இங்குக் கேட்பவன் கணவன். அவனிடம் உண்மையைக் கூறித்தான் ஆக வேண்டும். உண்மையான தரும சங்கடம் என்ற நிலைக்கு ஆளாகிவிட்டார் அம்மையார். எது எவ்வாறாயினும் கணவனிடம் கூறிவிடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து அவர் கூறத் தொடங்குவதற்கு முன்னர் இல்லிறைவன் (கணவன்) மிகத் தவறான ஒரு வினாவைக் கேட்டு விட்டான். இப்பொழுது அவன் கேட்ட கேள்வி, 'எய்தவருங் கனியளித்தார் யார்?' " என்பதாகும். முதலில் 'இப்பழத்தை எங்கு பெற்றாய்?' என்று வினவிய அவன், அவர் விடைகூறுமுன்னரே 'இப்பழத்தை யார் உனக்குக் கொடுத்தார்?' என்று கேட்டுவிட்டான். இந்த இரண்டு வினாக்களும் கடல் போன்ற வேறுபாடு உடையவை. முதல் வினா யாரை வேண்டுமானாலும் நோக்கிக் கேட்கலாம். ஆனால் இளமையுடன் அழகும் நிறைந்து விளங்கும் ஒரு பெண்ணைப்