பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 O 7 பார்த்து அவருடைய கணவனே இதனை யார் உனக்குத் தந்தார் கள்?' என்று கேட்பது படு மோசமான வினாவாகும். திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் ஆனபின்னரும் தன் மனைவியார் எத்தகையவர் என்பதை அறிந்துகொள்ள முடியாதவன் அவன் என்பதை இவ்வினா அறிவுறுத்துகின்றது. ஒரு சாதாரண மனிதன் கூட இத்தகைய வினாவைத் தன் மனைவியைப் பார்த்துக் கேட்க அஞ்சுவான். அப்படி இருந்தும் இவன் கேட்டான் என்று பாடுவது அம்மையார் எத்தகைய கணவனிடம் இத்துணை நாட்கள் காலம் தள்ளினார் என்பதை அறிவிக்கவேயாகும். பண்பாடு நிறைந்த மனைவிமார்கள் தம் கணவர் எத்தகையவராக இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் வாழ்கின்றனர் என்பதையும் ஒரளவு இந்நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. குணங்களால் முற்றிலும் முரண்பாடுடைய இவர்கள் எப்படி இத்துணைக் காலம் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தனர் என்ற வினாவிற்கு ஒரே வரியில் விடைகூறிவிடலாம். அந்த அம்மையார், தான் தனது என்ற இரண்டும் இல்லாத அடியார் ஆகலின் முரண்பாடுடைய கணவ னுடன் வாழமுடிந்தது என்ற இந்த நுண்மையையும் சேக்கிழார் இந்த வரலாற்றில் பெற வைக்கின்றார். பைரவர் சிறுத்தொண்டர் உரையாடலில் மனவியல் அறிஞராகக் காட்சி தருகிறார் - சிறுத்தொண்டர் தம் செயலால் மிகப் பெரிய புகழை எய்தி விட்டாலும் அவருடைய புகழுக்கும் தியாகத்திற்கும் ஆணிவேராக விளங்கியவர்.அவர் மனைவியார் என்பதைக் கூறவந்த கவிஞர், 4 - - - - - - - - - - - - - - மனை அறத்தின் வேராகி விளங்குதிரு வெண் காட்டு நங்கை... “ என்று குறிக்கின்றார். இத்தகைய உருவகம் செய்யக் காரணம் ஏதாவது இருத்தல் வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. படைத் தலைவராய் இருந்த சிறுத்தொண்டர் முற்றிலுமாக அகப் புறப் பற்றுக்களை நீக்கியவராக ஆகிவிட்டார் என்று நினைக்க முடியவில்லை. இதனைக் கவிஞர் குறிப்பாகக் காட்டிக் கொண்டே செல்கிறார். பைரவரைச் சந்தித்துத் தம் மனையில் அமுதுண்ண வேண்டும் என்று அழைத்த சிறுத்தொண்டரை நோக்கிப் பயிரவர், -

  • * * -- - - - - - - - - 'எம்மைப் பரிந்துட்ட

முடியாது. உமக்குச் செய்கை அரிது. ஒண்ணாது.....'"