பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 8 பெரியபுராணம் - ஒர் ஆய்வு என்று கூறுகிறார். முடியாது, அரிது, ஒண்ணாது என்ற சொற்கள் வேண்டுமென்றே பெய்யப் பெற்றனவாகும். ஒரே வார்த்தையில் முடியாது என்று கூறி நிறுத்தாமல், ஊட்ட முடியாது, செய்கை அரிது, ஒண்ணாது என்று கூறுவதே சிறுத்தொண்டரின் போர் வீர மனத்தின் அடித்தளத்தில் மறைந்து கிடக்கும் அகங்காரத்தைத் தட்டித் தூண்டிவிடுவதற்கே ஆகும். மூன்றுமுறை கூறிய வுடனாவது இவர் நின்று நிலைத்துச் சிந்தித்திருக்க வேண்டும். ஒரு போர் வீரனைத் தட்டி உசுப்ப ஒரே வழி அவனால் ஒன்றைச் செய்ய முடியாது என்று கூறுவதுதான். முன்பின் யோசியாமல் போரில் ஈடுபடும் மனமுடையவனைப் பார்த்து 'முடியாது' என்று கூறினால் உடனே அதனைச் செய்ய வேண்டும் என்று அவன் துள்ளி எழுவான். இந்த மனத்தத்துவத்திலிருந்து சிறுத் தொண்டர் இன்னும் விடுபடவில்லை என்பதைக் காட்டவே பைரவர் மும்முறை முடியாது என்று கூறுகிறார். அவர் நினைத்தது உடனே நடந்து விடுகிறது. முடியாது என்று கூறிய பிறகு சிறுத்தொண்டர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஒரு வினாடிகூட யோசனை செய்யாமல், - - 'எண்ணாது அடியேன் மொழியேன். '" என்று பேசிவிடுகிறார். இவரை இப்படி உசுப்பிவிட்டுச் சிக்க வைப்பதற்காகவே, வந்த பைரவர் ஒருகணம் சும்மா இருந்த வுடன், சிறுத்தொண்டர் மேலும் ஒருபடி சென்று, 'தண்ணார் இதழி முடியார்தம் அடியார் தலைப்பட் டால்தேட ஒண்ணாதனவும் உளவாகும்; அருமை இல்லை " எனக் கூறி வசமாக அகப்பட்டுக் கொள்கிறார். இப்பொழுது பைரவர் மறுபடியும், ‘புரியும் தொண்டீர்! மூவிருது கழிந்தால் பசுவீழ்த்திட உண்பது உரிய நாளும் அதற்கின்றால் ஊட்ட அரிதாம் உமக்கு...' என்று இவருடைய யோசனையற்ற பிடிவாதமான மனநிலையை மறுபடியும் குத்திவிடுகிறார். ஒரு சாதாரண மனிதனைப் பார்த்துக்கூட ஒரு செயலைச் சொல்லி இது உன்னால் செய்ய முடியாது என்று பலமுறை கூறினால், அவன் ஏன் முடியாது? என மார் தட்டி எழுவான். போர் வீரன் என்பவன் யோசனைக்கு அதிக இடம் கொடாமல் செயலில் இறங்குபவன். அவனைப்