பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 09 பார்த்து இத்தனை முறை முடியாது என்று சொல்லி அவன் அகங்காரத்தைத் தட்டி விட்டால் அவன் என்னதான் செய்ய மாடடான்! மேலும் முடியாது என்று கூறியவர் பசுவை உண்பேன் என்று கூறியவுடன், சிறுத்தொண்டர், வந்தவர் பேச்சில் ஏதோ சூது இருக்கும் போலும் என்று நினைந்துகூடப் பார்க்காமல் தம்மிடம் மூன்று வகைப் பசுக்கள் உண்டு, எதனை வேண்டு மானாலும் செய்ய முடியும் என்கிறார். இது கேட்ட பைரவர், 'நண்புமிக்கீர்! நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம் உண்பது ஐந்து பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னும் புண் செய் நோவில் வேலெறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்.' இந்த அளவிற்கு அப்போர் வீரரைச் சிக்க வைத்துவிட்ட பைரவர் இன்னும் ஒன்றுண்டு என்று கூறி நிறுத்துகிறார். இப்பொழுது சிறுத்தொண்டர் பின் வாங்குவதென்பது இயலாத காரியமாகி விட்டது. என்ன நடந்தாலும் மேலே சென்றுதான் ஆகவேண்டும் என்ற எல்லைக் கோட்டினை (Point of no return) முன்னரே அடைந்துவிட்டாராகலின் இப்பொழுது, 'யாதும் அரியது இல்லை! இனி ஈண்ட அருளிச் செய்யுமென நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒருமகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே ஏதம் இன்றி அமைத்தகறி யாம் இட்டுண்பது...... * 54 என மொழிந்துவிட்டார். இனிச் சிறுத்தொண்டருக்குத் தப்ப வழியே இல்லை. 'ஐயர் பெருந் தொடங்கலில் அகப்பட்டுக் கொண்ட அவர் முன்பின் யோசியாமல் எதுவும் முடியும் என்று வாக்குக் கொடுத்தபின்,பைரவர் இந்நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார். - இந்த நிலையில் சிறுத்தொண்டர் மனம் எந்த நிலையில் இருந்திருக்கும்? உலகில் வேறு எங்கும் காணாத, கேட்டிராத ஒரு முறையில் உணவு வேண்டுகிறார் பைரவர் இப்பொழுது சிறுத் தொண்டர் தம்மிடம் இருக்கும் புதல்வன் இத்தனை இலக்கணங் கட்கும் பொருந்தியுள்ளான் என்று நினைத்து அமைதியடைந்