பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 38 I பட்ட சட்ட திட்டங்களின் அடிப்படையில் நின்று போர் செய்தனர். இதிலுங்கூடச் சில வரையறைகளை வகுத்துக் கொண்டு தன்னாட்டைக் காப்பதற்கும் தவறிழைத்த பிற மன்னர்களைத் தண்டிப்பதற்கும், போரில் ஈடுப்பட்ட மன்னர் களைப் பற்றிப் பாடப்பெற்ற காப்பியங்கள் இலக்கியக் காப்பியங் களாக முகிழ்த்தன. இக் காப்பியங்களில் வரும் வீரர்கள் தனிப் போரில் தம் உடல்வலிமை காட்டி வெற்றி கொண்டவர்கள் அல்லர். யாதானும் ஒரு குறிக்கோளுக்காகப் போரிட்டு வெற்றி கொண்டவராவர். இன்னும் ஒரு படி மேலே சென்றால் போரில் வெற்றி பெறாவிடினும் தம் குறிக்கோளை நிலை நாட்ட வடக்கிருந்து உயிர் துறந்தவர்களும் வீரர்களாகவே கருதப் பெற்றனர். பண்பாடுகள் குறிக்கோள்கள் காப்பியப் பொருளாக அமையலாம் மனிதனுடைய பெருமையை வெளிப்படுத்தப் போர்க் களத்தில் அவன் செய்யும் போர்தான் காரணமாக அமைய வேண்டும் என்ற நிலைமை மாறிச் சமுதாய நலத்துக்காக அவன் செய்யும் தியாகம் முதலியனவும் காப்பிய நாயகர்கட்குரிய பண்பு களாகக் கருதப் பெற்ற காலம் வந்தது. அடுத்துப் புறத்தே வீரத்தை வெளிப்படுத்துவதைவிட மன அடக்கம், புலனடக்கம் என்பவற்றைக் கடைப்பிடிப்பதும் வீரத்தின் அடையாளமே என்று காப்பியப் புலவர்கள் கருதலாயினர். எனவே மனிதனிடம் காணப்பெறும் மிக உயர்ந்ததும், பெருந்தன்மை மிக்கதுமாகிய பண்பினை உடையவர்கள் வரலாற்றைப் பாடக் காப்பியம் சிறந்த ஊடுபொருள் என்ற கருத்துப் பரவலாயிற்று. இத்தகைய வளர்ச்சி தமிழகத்தில் தோன்றிப் பன்னுறு ஆன்டுகள் கழிந்த பின்னர், மேனாடுகளிலும் ரோம நாகரித்திலும் இடம் பெறலாயிற்று. இப்புதிய வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு புது முறை யில் இலக்கியக் காப்பியமாகிய 'இனியட்டை'ப் படைத்தவர் "வர்ஜில் என்ற மாபெருங் கவிஞராவார். இத்தகைய காப்பியங் களில் இடம் பெறும் பாத்திரங்கள் தங்கள் தனிப்பட்ட வீர தீரச் செயல்களால் காப்பியத்தில் இடம் பெறவில்லை. இப் பாத்திரங் கள் தங்கட்கு அப்பாற்பட்ட சிலவற்றை விளக்கும் பாத்திரங் களாக அமைந்ததுடன், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், அவர்களை மட்டும் பாதிக்காமல் பிறரையும் சமுதாயத்தையும் பாதித்ததைக் காட்டலாயினர். இலக்கியக் காப்பியங்களின் தோற்றத்தையும் அவை வகுத்த புதிய வழிகளையும் அவற்றின் உட்பொருளையும்பற்றி