பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தாரா என்ற வினாவிற்குச் சேக்கிழார் நேரிடையாக விடை கூறவில்லை. ஆனால் அடுத்துவரும் நிகழ்ச்சியில் அவர் மனக் கருத்தை அறிய முடிகிறது. - பைரவரிடம் விடை பெற்றுச் சென்ற தொண்டர் மனைவி யாரிடம் நடந்தவற்றைக் கூறவும் அந்தத்தாய், 'உரியவகையால் அமுதமைப்போம் ஒருவனாகி ஒரு குடிக்கு வரும்.அச் சிறுவன் தனைப் பெறுவது எவ்வாறு: ' என்று வினவுகிறார். இந்த வினாடிவரை அத்தாய்க்குத் தம் மகன் இந்தத் திட்டத்திற்குப் பொருத்தமானவன் என்ற எண்ணம் வரவே இல்லை. இப்பொழுதுதான் போர் வீரருடைய மன நிலையைக் கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார். அரசனுக்குப் படைத்தலைவராக இருந்து ஆயிரக் கணக்கானவர் களைக் கொன்று குவித்த அவருக்குப் பிறரைக் கொல்வதில் வியப்போ மலைப்போ தோன்றவில்லை. ஆனால் இதுவரை அவர் யாரைக் கொன்றார்? முன்பின் தெரியாதவர்களைப் போர்க்களத்தில் எதிரே சந்தித்த ஒரே காரணத்தால்தானே. முன்பின் யோசனை செய்யாமல் கொன்றார். 'சிறுவன் ஒருவனைச் சமைத்துத்தான் உண்பது வழக்கம்' என்று வந்தவர் கூறியது இவருக்கு எவ்வித அதிர்ச்சியையும் தாராமைக்குக் காரணம் அவருடைய தொழிலால் வளர்ந்த மனநிலையாகும். அதே மனநிலையில் இருந்த பரஞ்சோதியார் இப்பொழுதுதான் தம் திட்டத்தின் குறைபாட்டை உணர்கிறார். ஆனால் உண்மையான வீரன் ஒரு வகையில் நின்று போரிட்டு அதனால் பயன் இல்லை என்று கண்டால் உடனே மற்றொரு வகையைக் கையாளும் திறம் படைத்தவன். இரண்டாவது வகையின்குறைவு நிறைவு களை ஆய அப்பொழுது நேரம் இராது. உடனே செய்து முடிக்க வேண்டும். அதே நிலைக்கு இப்பொழுது தொண்டர் தள்ளப்படு கின்றார், • 'மனைவியார்தம் முகம்நோக்கி மற்று இத்திறத்து மைந்தர்தமை நினைவுநிரம்ப நிதிகொடுத்தால் தருவார் உளரே! நேர் நின்று தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லை, தாழாமே எனை இங்குய்ய நீ பயந்தான் தன்னை அழைப்போம் யாம் என்றார்' "