பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 1 I என்ற பாடலில், வேறு எவ்வகையான முறையிலும் தம் சொல்லைக் காக்க முடியாது என்று கண்ட பின்னரே மனைவியா ரைப் பார்த்து 'நீ பெற்ற பிள்ளையை அழைப்போம்' என்கிறார். எனவே, நினைவு நிரம்ப நிதி கொடுத்துப் பிறர் பெற்ற பிள்ளையை வாங்கிக் கறி சமைக்க இவ் வீரர் விரும்புகிறார். ஆனால் பிள்ளையை விற்பவர் தாமே முன்னின்று அப் பிள்ளையை அரிய முன்வாரார் என்ற காரணத்தால் தம் பிள்ளையை அழைக்க முடிவு செய்கிறார் சிறுத்தொண்டர். இந்த உரையாடல் நடந்ததா இல்லையா; என்று யாரும் கூறமுடியாது. அப்படியிருக்கச் சேக்கிழார் ஏன் இத்தகைய ஒரு உரையாடலை அமைக்க வேண்டும்? சிறுத்தொண்டரின் தொண்டில் 'தான் ஓரளவு கலந்திருந்தது என்பதை விளக்கவே இந்த உரையாடலையும் தொண்டரின் எண்ண ஓட்டங்களையும் இவ்வளவு விரிவாகக் கவிஞர் கூறிச் செல்கின்றார். இவ்வாறு கூறுவதால் அவருடைய தொண்டைக் குறை கூறுவதாக யாரும் நினைந்துவிடத் தேவை இல்லை. தொண்டர்களில் பலவகை உண்டு. விறன்மிண்டர், ஏயர்கோன் கலிக்காமர் ஆகியோர் மனநிலைக்கும் திருக்குறிப்புத் தொண்டர் மனநிலைக்கும் வேறுபாடு உண்டு. முன்னர்க் குறிப்பிட்ட இருவரிடையில் தான் என்பது தலைதுாக்கி நின்றது உண்மைதான். ஆனால் அந்தத் 'தான் பிறரிடங் காணப் பெறும் 'நான்' என்பதிலிருந்து வேறுபட்டது. தாம் கொண்ட கொள்கையின்மாட்டுக் கொண்ட உறுதிப்பாட்டால் 'தான்' என்பதற்கு இவர்கள் ஒரளவு இடம் தந்துவிட்டனர். கொள்கையைக் காக்கும் அந்த 'தான்' ஏனைய நாணினும் வேறுபட்டது. சிறுத்தொண்டர் நானும் இத்தகையதே என்பதைச் சேக்கிழார் நுண்மையாகத் தமக்கே உரிய முறையில் காட்டிச் செல்கின்றார். இலையில் உட்கார்ந்த பைரவர் சோற்றையும் கறியையும் ஒன்றாகக் கலக்கச் செய்து போதாததற்குச் சிறுத்தொண்டரையும் உடனமர்ந்துண்ண ஏற்பாடு செய்துவிட்டார். அப்பாவியான சிறுத்தொண்டர் இன்னும் ஏதாவது குழப்பம் விளைவித்து அடியார் உண்ணாமற் போய்விடுவாரோ என்ற அச்சத்தால் விருந்தினராகிய அவர் உண்ணத் தொடங்கு முன்னர்த் தாம் உண்ணத் தொடங்கினாராம். இதனைக் கண்ட பைரவர் இதோ 47 பேசுகிறார், 'ஆறு திங்கள் ஒழிந்து உண்பேம் உண்ணும் அளவும் தரியாது