பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சோறு நாளும் உண்பீர்! முன் உண்பது என்? நம் உடன்துய்ப்ப மாறின் மகவு பெற்றிரேல் மைந்தன் தன்னை அழையும் என ஈறும் முதலும் இல்லாதார்க்கு 'இப்போது உதவான் அவன் என்றார். 'நாமிங்கு உண்பது அவன்வந்தால் நாடி அழையும்." என்ற முறையில் இந்தப் பைரவர் தொண்டரை ஏன் இகழ வேண்டும்? தொண்டரிடம் ஏதோ குறை இருப்பதால்தான், ஈறும் முதலும் இல்லாதவன் இவ்வாறு பேசுகிறான். தாம் பெற்ற பிள்ளையைத் தாமே அரிந்து கறி சமைத்து அதனைத் தாமேயும் உண்ணத் தொடங்கும் இத் தொண்டரைப் பார்த்து, 'தினம் சோறு உண்ணும் உனக்கென்ன அவசரம்?' என்று மனம் நோவப் பேசுகிறார் பைரவர். இந்த நிலையிலும் தொண்டரின் நான் கழல வில்லை. இப்பொழுது கணவன் மனைவி இருவரும் சென்று மைந்தனை அழைக்கின்றார்கள். அழைக்கும் முறையைக் கூறும் பொழுதே, தொண்டருக்கும் அவர் மனைவியாருக்கும் உள்ள வேறுபாட்டைக் கவிஞர் காட்டிச் செல்கின்றார். 'வையம் நிகழும் சிறுத்தொண்டர் 'மைந்தா வருவாய்' என அழைத்தார். தையலாளும் தலைவர் பணி தலைநிற்பாராய்த் தாம்அழைப்பார் 'செய்ய மணியே! சீராளா! வாராய்! சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார் என்று ஒலமிட ’’ வையம் போற்றும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய்' என அழைத்தாராம். உள்ளவன் ஒரே மைந்தன்; அவன் இப்பொழுது கறியாகவும் குழம்பாகவும் இருக்கிறான். அவ்வாறு அவனை ஆக்கிய தொண்டர், 'மைந்தர்!’ என்று யாரை அழைக்கின்றார்? அவரிடம் எஞ்சியிருந்த அகங்காரத்தின் பயனாகிய மமகாரம் 'மைந்தா' என்று அழைக்குமாறு செய்துவிட்டது. யான், எனது என்ற இரண்டும் இருப்பதால்தானே மைந்தன் என்ற உறவு முறைப் பெயர் கூறி அழைக்கின்றார். அதனால்தான் மைந்தன் வரவில்லை. ஆனால் மனையறத்தின் வேராகி விளங்கும் அந்த அம்மையார் இவை இரண்டையும் சுட்டெரித்துவிட்டமையின் இப்பொழுது