பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I 1 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் மிக்கான் பிசையுத்தரியத் துகில் தாங்கி.... ' தசையெலாம் ஒடுங்க மூத்தான் - - - - . , 6 s; வழக்கினைச் சாரச் சொன்னான் என்று கூறும்போது இம்முதியவன் நடுங்கி நுடங்கிப் பேசுகிறான் என்கிறார். காரணம், உலகில் எங்கும் எவரும் கேள்விப்படாத ஒரு வழக்கை, ஏதோ ஒர் ஒலை நறுக்கை வைத்துக் கொண்டு வெல்ல முயல்கிறான். எனவேதான் இந்த நடுக்கமும், பார்ப்பவர் பரிவைத் தன்பால் ஈர்க்க முயலும் முயற்சிகளும் என்பதைக் கவிஞர் குறிப்பால் உணர்த்துகிறார். ஏனைய நீலகண்டர், அமர்நீதி என்பவர்களிடம் வழக்கிடும் போது இத்தகைய இக்கட்டான நிலை ஏற்படவில்லை. இருவரிடமும் முறையே ஒட்டையும், கோவணத்தையும் இவன் வைத்துச் சென்றதாகவும் அவற்றை அவர்கள் திருடிக் கொண் கள் என்பதுமே அவனுடைய வழக்காகும். இந்த இரு வழக்கு களிலுமே அவனுக்கு இருந்த ஒரு பெரு வாய்ப்பைக் கவனிக்க வேண்டும். பிரதிவாதிகளாகிய அவர்கள் இருவருமே அவன் ஒட்டையும், கோவணத்தையும் தம்மிடம் வைத்தது உண்மை தான் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். எனவே கிழவேதியன் கை ஓங்கி விடுகிறது. ஆகவே இந்த இருவரிடமும் அவன்பேசும் பேச்சு மிக அதிகமாகவும் கொடுமையுடையதாகவும் உளது. நீலகண்டரைப் பார்த்து 'என் இது மொழிந்தவா நீ யான் வைத்தமண் ஒடன்றிப் பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேள்!' 'ஆவதுஎன்? உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வெளவிப் பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நானாய்! யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டேயன்றிப் போவதும் செய்யேன் "' என்று பேசுகிறான். அமர்நீதியாரிடமும் இதே முறையில் அவன் பேசுகிறான் என்பதை 'நல்ல கோவணம் கொடுப்பன் என்றுலகில் மேல் நாளும்