பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 I 5. சொல்லுவித்தது. என் கோவணம் கொள்வது துணிந்தோ? ஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கு என்று எல்லையில்லவன் எரிதுள்ளினால் என வெகுண்டான்' " - இவ்வாறு சேக்கிழார் பாடுவதில் உலகியல் முறையைக் காப்பியத்தில் புகுத்துகிறார் என்பதை உணர முடிகின்றது. இதனால் காப்பியச் சுவை மிகுகின்றது என்பதும் திறனாய்வு முறையில் உண்மை. ஆனால் ஏனையோரைப் போல இலக்கியக் காப்பியம் பாடவரவில்லை இவர். நாட்டையும் மக்களையும் தட்டி எழுப்பி முன்னேற்றவே காப்பியம் பாடினாராகலின் தம் குறிக்கோளை அவர் மறப்பதே இல்லை. தொண்டர்களாக உள்ளவர்கட்கு வேண்டிய பண்புகள் யாவை என்பதைப் பல்வேறு புராணங்களிலும் வைத்துக் காட்டிக் கொண்டே செல்கின்றார். பணிவுடைமை, அடக்கம், அகங்கார மமகார அழிவு என்பவை தொண்டர்க்கு இன்றிமையாத பண்புகளாகும். பணிவு அடக்கம் என்பவற்றை ஒருவர் பெற்றுள்ளார் என்பதை எப்பொழுது அறிய முடியும்? சும்மா இருக்கின்ற நேரங்களில் அனைவருமே பண்புடையவர்போல்தான் இருப்பர்! ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும்பொழுதுதானே ஒருவருடைய உண்மை வடிவம் வெளிப்படும். - . . நியாயம் தம்மிடம் உள்ளதை நீலகண்டர், அமர்நீதி இருவரும் அறிவர். மனத்தினாலும் களவு என்ற சொல்லைக்கூட அவர்கள் நினைத்தது கிடையாது. அவர்கள் பெருவசதி படைத் தவர்கள். இந்தக் கிழவனுடைய ஒட்டையோ கோவணத்தையோ திருடி அவர்கட்கு ஆகப்போவது எதுவும் இல்லை! அவை வைத்த, இடத்திலிருந்து காணாமற் போய்விட்டன என்றுதான் கூறுகிறார்கள். அதற்குப் பதிலாக என்ன தண்டனை தரினும் ஏற்கத் தயாராக உள்ளார்கள். அப்படி இருந்தும் கிழ வேதியன் அவர்களை ஏசுகிறான். அதுவும் அவர்களுடைய நேர்மையை ஐயுறுவதாகப் பேசிக் கூச்சலிடுகிறான். ஒரு நேர்மையுள்ள மனிதன் தன்பால் இருக்கும் எதனையும் இழக்கத் தயாராக இருப்பான்; ஆனால் அவன் உயிர்போல மதித்துப் போற்றும் அவனுடைய நேர்மையை எவரேனும் சந்தேகப்பட்டால் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில் அவன் சினமடைந்தால் அதில் யாரும் தவறு காண முடியாது; சினங்கொள்வதைத் தவறு என்று கூற முடியாது என்பது உண்மை