பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு தான். ஆனால் அவ்வாறு சினங்கொள்பவன் தன் ஆன்மீக வளர்ச்சியை இழந்துவிடுகிறான் என்பதையும் மறுக்க முடியாது. இங்கு நீலகண்டரும், அமர்நீதியும் எப்படியாவது சினங்கொண்டு தன்னை எசவேண்டும் என்றுதான் கிழவன் பேசுகிறான். அவர் கள் இறுதிவரைத் தங்கள் பொறுமை, பணிவு என்பவற்றைக் கைவிடாமல் சினங்கொள்ளாமல் இருப்பதால் வெற்றியடைந்து விடுகின்றனர். இறைவன் உகக்கும் தொண்டர்களாக ஆகி விடுகின்றனர். தன்மானத்தை இழக்க வேண்டிய நிலைவருவது தான் கடைசிச் சோதனையாகும். அதில் வெற்றி பெறுபவர்கள் மாபெரும் தொண்டர்களாக ஆகிவிடுகின்றனர். தொண்டர்கள் பண்பாட்டு வளர்ச்சியை அவ்வப்பொழுது எடுத்துக் காட்டிக் கொண்டே செல்லும் வாய்ப்பைச் சேக்கிழார் விடுவதே இல்லை. திருமணம் தடைப்பட்டாலும் அந்த மாப்பிள்ளைக் கோலத்துடன் பல ஊர்கள் சென்று இறைவனை வணங்கப் புறப்பட்ட சுந்தரர் திருவதிகையின் உள்ளே நடந்து செல்ல அஞ்சுகிறார். ஏன்? இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றிருப்பினும் இப்பெரு மக்கள் தங்களை என்றும் உயர்வாகக் கருதிக் கொண்டதே இல்லை! - உடைய அரச உலகேத்தும் உழவாரப் படையாளி விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே மடைவளர்தண் புறம்பனையில் சித்தவட மடம்புகுந்தார் என்ற பாடல் மூலம் நாவரசர் கைத்தொண்டு செய்த ஊரில் தாம் காலால் நடந்து செல்ல அஞ்சுகிறார் தொண்டர் என்பதைக் கவிஞர் விளக்குகிறார். எனவே ஊரின் ஒதுக்கிடத் திலுள்ள சித்தவட மடத்தில் இரவு தங்குகிறார். அவர் படுத் திருக்கும் இடத்தில் அவர் தலைமேல் ஒருவர் கால்பட, இவர் யார் என்று கேட்க, அவர், 'திசையறியா வகை செய்தது என்னுடைய முப்புக்காண்' " என்று கூறவும், சுந்தரர் வெவ்வேறு இடங்களிற் சென்று படுக்க வும் அங்கங்கே கால்பட உதைத்தவர் ஒவ்வொரு முறையும் இதே பதிலை தருகின்றார். எத்தகையவர்களும் பொறுமையை இழந்துவிடக் கூடிய முறையில் பலதடவையும் ஒருவருடைய