பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 1 7 தலையை மிதித்துவிட்டு ஒவ்வொரு முறையும் 'திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்பு' என ஒருவர் பதிலிறுத்தால் சினங் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் இவ்வாறு பலமுறை மிதிபட்டும் நம்பியாரூரர் சிறிதும் சினங்கொள்ளாமல், 'நீர் யார்?' என்று பொறுமையாகக் கேட்டார் என்று பாடுகிறார் கவிஞர். - 'அங்குமவர் திருமுடிமேல் மீட்டுமவர் தாள் நீட்டச் செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவலு ராளி இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனைநீ யார் என்னக் கங்கை சடைக் கரந்தபிரான் அறிந்திலையோ? எனக் கரந்தான்' 6 5 பலகால் மிதித்தவர் முதியவர்; அத்தனை தடவைகளிலும் தம்மை இன்னார் என்று தெரிவித்துக்கொள்ளாத முதியவர். மிதிபட்டவர் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற இளைஞர்; மாப்பிள்ளைக் கோலம் இன்னும் களையாதவர். என்றாலும் அவர் மேல் சினங் கொள்ளாமல் 'நீ யார்?' என்று கேட்கும் ஒரு சிறிதும் குறையாத பண்புடைய தொண்டரைச் சேக்கிழார் 'நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்' என்று அடை கொடுத்துப் பேசுகின்றார். கேள்வி மேலோரின் இலக்கணம் கூறவந்த திருக்குறள், 'துணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது" - - - - என்று கூறிற்று. சித்தவட மடத்தில் இத் தொண்டருடைய வணங்கிய வாயைக் கண்டதால், இவரை துணங்கிய கேள்வியை யுடைய மேலோன் என்று கவிஞர் குறிப்பிடுகின்றார். - வரலாற்று நாயர்கள் சரிதையைப் பாட வேண்டிய சூழ்நிலையில் இருந்தாலும் அக் காப்பியம் எந்த அளவுக்குச் சிறக்க முடியுமோ அந்த அளவுக்குச் சிறந்த அமைப்பை இட்டுப் பாடிய பெருமையை ஒருவாறு அறிய முடிகின்றது. உவமை கூறுவதில் இணையற்றவர் கவிதைகட்கு உயிர் போன்றது. உவமை என்று திறனாய் வாளர் கூறுவர். மிகப் பழைய தொல்காப்பியம் கவிதைக்கு