பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 18 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அமையத் தக்க வேறு அணிகள்பற்றி ஒன்றுங் கூறவில்லையாயினும் உவமையின் இன்றியமையாமையை ஏற்றுக் கொண்டு 'உவம இயல்' என்று தனியே ஒர் இயலையும் படைத்துள்ளது. உவமை என்பதைக் கற்றவர் கல்லாதவர் ஆகிய இரு சாராரும் பயன் படுத்துகின்றனர் என்பது உண்மையாயினும் ஒரு கவிஞனுடைய சிறப்பை அளவிட அவன் பயன்படுத்தும் உவமைகளுள் ஒன்றை மட்டுமே கொண்டுகூட அளவிடலாம். உவமைகள் ஒருபுடை ஒத்துள்ள பண்பால் மட்டும் உவமிக்கப்படுவதில்லை. உவமைகள் அவற்றைக் கற்பார் உள்ளத்தில் ஒர் உயர்வை, வளர்ச்சியை நிறைவை உண்டாக்கல் வேண்டும். சிறந்த கவிஞன் எந்த ஒன்றை வலியுறுத்த வேண்டும் என்று மனத்துள் கொண்டானோ அதனை அடிக்கடி நினைவூட்ட இந்த உவமைகளை வெளிப்படை யாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்துகிறான். உவமைகள் கவிஞனுடைய கல்வியின் விரிவை மட்டுங் காட்டாமல், அவன் உள்ள வளர்ச்சி, விரிவு என்பவற்றையுங் காட்டல் வேண்டும். இவற்றை மனத்துட் கொண்டு சேக்கிழாரின் உவமைகள் சிலவற்றைக் காண்டல் பயனுடையதாகும். வளரும் நெற்பயிரின் பல்வேறு நிலைகளையும் உவமித்துச் சிந்தாமணியார் அற்புதமான ஒரு கவிதை புனைந்துள்ளார். 'சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்து, ஈன்று, மேலலார் செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே "" என்ற இக் கவிதையின் இறுதி அடியை எடுத்துக் கொண்டு சேக்கிழார் வேறு உவமை கூறுகிறார். கல்வி சேர் மாந்தர்கள் தலை வணங்கினாலும் அவ் வணக்கத்தின் அடியில் வணங்கு கிறோம் என்ற தன்னுணர்ச்சி இருக்கும். அதுவும் தன் உணர்வை அறவே ஒழித்தார் வணக்கத்தைக் கூற விரும்பிய சேக்கிழார், நெற் கதிர்கள் தலை சாய்த்து இருக்கும் நிலைமைக்கு மற்றோர் அற்புதமான உவமையைக் கையாள்கின்றார். 'பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல் மொய்த்தநீள் பத்தியின் பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மைபோல விளைந்தன சாலி எல்லாம் " உலகில் உள்ள தலங்கள் இலைகளாகவும், உலகம் இத் தளிர்களை யுடைய கொடியாகவும், கயிலை மலை அக்கொடியில் பூத்த வெண்மலராகவும் உருவகஞ் செய்யப் பெறுகிறது.