பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சி.எம்.பெளரா கூறுவது அப்படியே ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும். மேனாட்டு லத்தீன், ஆங்கில, இத்தாலிய மொழி இலக்கியக் காப்பியங்கள் பற்றியே அவர் கூறுகிறார் எனினும், அவை உலகில் உள்ள வளர்ச்சி பெற்ற எல்லா மொழிகளிலும் தோன்றியுள்ள எல்லா இலக்கியக் காப்பியங்கட்கும் பொதுவானவையாகும் என்பதை அறியலாம். 'இலக்கியக் காப்பியத் தோற்றத்தால் இன்றியமையாத ஒரு பயன் விளையலாயிற்று. ஹோமரைப் போலத் தனிமனிதர்களை அப்படியே காண்பிப்பதில் இலக்கியக் காப்பியங்கள் திருப்தியடைய வில்லை. அவை ஒரு குறியீட்டையோ (Symbo) அல்லது ஒரு குறிக்கோளையோ (ideal) அல்லது தன்னினும் வேறான ஒன்றைக் காட்டி நிற்கும் பாத்திரத்தையோ படைத்தன. ரோமாபுரியின் பிரதிநிதியாக ஏனியஸும் (Aeneae) போர்ச்சுகலின் பிரதிநிதியாக காமாவும் (Gama) கிறித்துவப் பண்பாட்டின் பிரதிநிதியாக காஃப்ராடோவும் (Goffredo) மனித சமுதாயத்தின் பிரதிநிதியாக ஆதாமும் (Adam) காப்பியங்களில் இடம் பெற்றுள்ளனர். எடுத்துக் கொண்ட கதைக்கு உடனடியாகத் தெடர்பு இல்லாத மாபெரும் பிரச்சினைகள் காப்பியத்தில் இடம் பெறலாயின. மனிதனின்கடமை, சூழ்நிலை என்பவற்றைக் காப்பிக் கவிஞன் காப்பியத்துள் புகுத்துகிறான். இதன் பயனாக, அவன் இயற்றிய நூல் அறிவுபுகட்டும் பணியை மேற்கொள்கிறது. இலக்கியக் காப்பிய நாயகர்கள் மனிதன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுபவர்களாக அமைகிறார்கள். அந்த நாயகர்கள் செய்யும் தவறுகளால் அவர்கள் எய்தும் பயனுங் கூட ஒரு படிப்பினையை நல்குவதாக அமைகிறது. பல சமயங்களில் ஒரு காப்பியப் பாத்திரத்துக்குரிய திண்மையைக்கூடப் பெறாதவர் களாகப் பாத்திரங்கள் அமைவதுண்டு. இதன் காரணம் அவர் கள் பாத்திரங்கள் என்பதைவிட முன்னுதாரணங்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ட்ரைடன் (Dryden) என்பார், 'வீரப் பண்பாட்டிற்கு இவர்கள் முன்னுதாரணங்களாக அமைக்கப் பெறுகின்றனர், அறிவு கொளுத்துவதற்காக ஆக்கப்படும் இவை பாடல்களாக அமைந்தது, படிப்பவர்க்கு இன்பம் ஊட்டவேயாம், என்று வீரப் பாடல் பற்றிக் கூறிய கருத்து அனைவரும் ஏற்க வேண்டியதேயாகும்.'" இதனை அடுத்து பெளரா இக் கருத்தை மேலும் வலியுறுத்து முறையில் பேசுகிறார். 'அறிவு புகட்டும் குறிக்கோள் காப்பியம் தோன்றிய காலத்துக்குத் தொடர்பில்லாததாகக் கூட இருக்க லாம். என்றாலும் அதன் இருப்பை மறந்துவிடக் கூடாது. இதன் அறிவு புகட்டும் குறிக்கோள் காப்பியத்துள் வெளிப்படையாகத்