பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு o - 7 7 . - - - - - - או வங்கினைப் பற்றிப்போகா வல்லுடும்பு என்ன நீங்கான் என்பதாகும். அரசர்கள் இல்லாத நாடு வாழமுடியாது என்பதற்கு, 'மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங்காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும்...' என்ற உவமை பேசப் பெறுகிறது. உருவகம் செய்யும் ஆற்றல் இத்தகை உவமைகள் ஒருபுறம் இருக்க, ஒரு பாடல் முழுவதும் உருவகமாகச் செய்யுந் திறமும், அதுவும் பக்தி அடிப்படை யிலேயே அந்த உருவகத்தை ஆக்கும் திறமும் கண்டு மகிழ்வதற் குரியதாகும். நாவரசரும் ஆளுடைய பிள்ளையும் சீர்காழியில் முதன்முதலில் சந்தித்துத் திருக்கோயிலுக்கு வருகின்ற நிலையைக் கவிஞர் தம் கற்பனைக் கண்களிற் கண்டதால் இந்த உருவகம் தோன்றுகிறது. அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம் அன்பு செறி கடலுமாம் என்வும் ஒங்கும், பொருட் சமயமுதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் இரண்டெனவும் புவனம் உய்ய இருட்கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்தன் திருவருளும் எனவும்கூடித் தெருட்கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செஞ்சடை வானவர் கோயில் சேர்ந்தாரன்றே ' பரசமய கோளரியாய் அவர்களைத் தண்டிக்கும் ஆளுடைய பிள்ளையார் அன்பு செறி கடலாகவும், இருட் கடு உண்டவர் அருளாகவும் உருவகிக்கப்படுகின்றார். சமணர் செய்த அத்தனை கொடுமைகளையும் ஏற்றுக் கொண்டு மனத்தில் மாற்சரியம் இல்லாமல் இருந்த சத்யாக்கிரகியாகிய நாவரசரை அருட்கடல் என்றும், உலகம் எல்லாம் ஈன்றாள் திருவருள் என்றும் உருவகித்துப் பேசத் தொண்டர் சீர் பரவ வல்ல சேக்கிழார் ஒருவருக்கே முடியும். இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகளை இயல்பாகக் கூறல் பொதுவாகக் காப்பியங்களில் இயற்கையின் இறந்த நிகழ்ச்சி கள் பேசப்படுவது இயற்கை. உலக மொழிகள் அனைத்திலும்