பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 72 1 உள்ள காப்பியங்கள் அனைத்திலும் இந் நிகழ்ச்சிகள் இல்லாத காப்பியங்களைக் காணமுடியாது. எனவே தமிழ்க் காப்பியங் களில் இவை இடம் பெறுவதில் வியப்பில்லை. பெரியபுராணத் தைப் பொறுத்தமட்டிலும் இந்த அடியார்கள் இறைவன் அருளைப் பூரணமாகப் பெற்றவர்களாகலின் அற்புதங்கள் (Miracles), என்பவை இவர்களைப் பொறுத்தமட்டில் சாதாரண மாக இயற்றப் படுபவையாகும். ஆனால் அற்புதங்களையும் அவை இயற்றப் பெற்றதையும் அனைவரும் நம்ப முடியுமா? என்ற வினாவிற்கு விடை கூறல் கடினம். அவரவர்களின் நம்பிக்கையைப் பொறுத்த விஷயமாகும் அது. எல்லா நாயன் மார்களுடைய வரலாறுகளிலும் சேக்கிழார் அற்புதம் நிகழ்ந்த தாகக் கூறவில்லை. பல அடியார்கள் தம் உயிரை விடுகின்ற நேரத்தில் இறைவன் காட்சி தந்தான் என்று மட்டுமே கூறிப் போகின்றார். இறந்தவர்களை எழுப்புதல், நோய் தீர்த்தல் முதலிய சில அற்புதங்கள், மூவர் முதலிகள் போன்ற சிலருடைய வரலாறுகளிலும், சிறுத்தொண்டர் போன்றோர் வரலாறுகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. இவை புற நடையாக உள்ளவை. என்றாலும் சைவ சமயத்தையும், சிவனடியார்களையும், சிவபரம் பொருளையும் நம்புகின்றவர்கட்கு இவை அற்புதமாகப் படுவதில்லை. இப் பெருமக்களைப் பொறுத்தமட்டில் ஏதோ சாதாரண அன்றாடச் செயல்களைப் போல இவற்றை நிகழ்த்தி னார்களே தவிர இவற்றிற்குத் தனி மதிப்பு எதுவும் தந்ததாகத் தெரியவில்லை. சமய அடிப்படையில் அச் சமயப் பெரியார்கள் பற்றிப் பேசும் காப்பியத்தில் அற்புதம் பேசப்படுவதில் வியப் பொன்றும் இல்லை. இத்தகைய இடங்களில் இவை நடைபெறக் கூடியனவா? என்று கேட்டுப் பயனில்லை. அக் கவிஞன் படைக் கின்ற உலகை ஏற்றுக் கொண்டு அவன் வகுக்கும் சட்ட திட்டங் களையும் வரம்புகளையும் ஏற்றுக் கொள்வதானால் இந்த இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகள் சாதாரணமானவையாகவே படும். பெரியபுராணம் காட்டும் உலகில் இவை சாதாரண அன்றாடச் செயல்களேயாம். - என்றாலும் இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகளைப்பற்றிப் பேசும் பொழுது கவிஞர் மிகவும் கவனமாகவே பேசுகிறார் என்பதையும் அறிய முடிகிறது. ஆனாயர் குழல் வாசித்தார். அன்பின் அடிப்படையில் மனம் நிறைந்திருந்தது. அவர் குழலில் அந்த அன்பு ஐந்தெழுத்தாக வெளிப்பட்டது. உலக முழுவதையும் சூழந்து தழுவியுள்ளது அன்பு. ஆகலான் அந்த அன்பு வெளிப்படு மானால் உலகந் தழுவியதாக விரிதலில் வியப்பில்லை. எனவே அவர் குழலிசை வையம் முழுவதையும் நிறைத்து வான் நோக்கி