பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 22 பெரியபுராணம்- ஓர் ஆய்வு எழுந்தது என்று கூறுகிறார் கவிஞர். ஆனால் வான் நோக்கி எழுந்த அந்த இசை ஓரளவுதான் செல்ல முடிந்தது. வானம் எனப் பெறும் ஆகாயத்தை நிறைத்தாலும் அதனையும் கடந்து நிற்கும் பரம்பொருளிடத்துச் செல்லும் ஆற்றல் இந்த உலகில் தோன்றிய அந்த இசைக்கு இல்லை. எனவே சேக்கிழார் மிகவும் கவனத்துடன் அசுத்தமாயா காரியமான இந்த உலகிடைப் பிறந்த இசை ஐயனிடம் சென்று அடைந்தது என்று கூறாமல் அவன் திருச் செவியின் அருகு செல்வான் வேண்டிச் சென்றது என்று மட்டும் கூறுகிறார். ‘மெய்யன்பர் மனத்தன்பின் விளைந்த இசைக் குழலோசை வையந் தன் னையும் நிறைத்து வானம்தன் வயமாக்கிப் பொய்யன்புக் கெட்டாத பொற் பொதுவில் நடம்புரியும் ஐயன்தன் திருச் செவியில் அருகு அணையப் பெருகியதால் ' என்ற இப்பாடல் சேக்கிழார் எவ்வளவு கவனத்துடன் காப்பியப் பாடல்களைப் புனைகின்றார் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். அன்பும் சிவமும் ஒன்றே என்ற கருத்துடைய சைவர்கள், சிவம் எங்கும் நிறைந்துள்ளது என நம்புகிறவர்கள். எனவே அன்பின் அடிப்படையில் எது நிகழ்ந்தாலும், அது இந்த உலகம் முழுவதையும் தழுவியதாக அமையும் என்றும் நம்புகின்ற மையின் சேக்கிழார் இவ்வாறு பாடுகிறார். சேக்கிழாரின் இசைப் புலமைக்கு எடுத்துக் காட்டாக ஆனாயர் புராணத்தின் பாடல்கள் உள்ளன. ' ஓசை நயம் அமையப் பாடும் திறம் இப் பெருமகனார் பிறவியிலேயே கவிஞராகவும் சொல்லின் ஒசை வேறுபாடுகளை நுனித்தறியும் ஆற்றலுடையவராகவும் இருந்தார் என்பது இவர் பாடல்களை வாய் விட்டுப் பாடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அரசன் ஏவலால், நாவரசரை யர்னையின் கால்களால் மிதிக்கச் செய்ய முயல்கிறார் கள். அந்த யானை சீறி வருகின்ற நிலையைப் பாடலின் ஒசை யாலேயே காட்டும் வன்மை படைத்தவர் கவிஞர். 'பாசத்தொடை நிகளத்தொடர் பறியத்தறி முறியா மீசுற்றிய பறவைக்குலம் வெருவத்துணி விலகா ஊசற்கரம் எதிர் சுற்றிட உரறிப்பரி உழறா வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர் வருமால். '