பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 2 3 'இடியுற்றெழும் ஒலியில்திசை இபமுட்கிட அடியில் படிபுக்குற நெளியப்படர் பவனக்கதி விசையில் கடிதுற்றடு செயலிற்கிளர் கடலிற்படு கடையின் முடிவிற்கனல் எனமுற்சினம் முடுகிக்கடு கியதே. "" என்ற பாடல்களில் சங்கிலியைத் துதிக்கையில் தூக்கிக் கொண்டு வேகமாகவும் பக்கங்களில் அசைந்து கொண்டும் வரும்யானையின் வரவை ஒசையால் காட்டுகின்றார். முதற் பாடலில் 44 வல்லெழுத்துக்களை அவற்றின் ஒசைச் சிறப்பறிந்து பயன்படுத்து தல் அறிதற்குரியது. பாசத்தொடை நிகளத்தொடர் பறியத்தறிமுறியா' மாறுபட்ட எழுத்துக்களில் அழுத்தம் தருவதாலும், முன்னும் பின்னும் உள்ள எழுத்துக்கள் இந்த அழுத்தங் காரண மாக ஒரளவு மென்மைத் தன்மை அடைதலினாலும், யானை பக்கவாட்டில் அசைந்து அசைந்து வரும் காட்சியை மனக் கண்ணில் வருமாறு செய்துவிடுகிறார். இப்பாடலை விளம்ப காலத்திலும், செளக்கமாகவும், துரித காலத்திலும் படிப்பதால் அந்த யானை மெள்ளப் புறப்பட்டு ஓரளவு தூரம் வருவதையும் தன்னைப் பாகர்கள் கடாவுவதால் அதன் வேகம் அதிகப் படுதலையும் உணருமாறு செய்யும் வித்தகம் அனுபவிப்பதற்குரிய தாகும. பொருளை ஒசையாலும் அகராதிப் பொருளாலும் விளக்கும் திறம் வல்லினம், இடையினம், மெல்லினம் என்ற எழுத்துக்களை அவற்றின் இயல்பறிந்து பயன்படுத்துவதால் எந்த ஒரு பண்பு விளைவையும் (effect) ஏற்படுத்த முடியும். சாதாரணக் கவிஞர் கள் இம்மாதிரிப் பண்பு விளைவை ஏற்படுத்தல் இயலாத காரியம். பெருங் கவிஞர்கட்கே இது இயலும். ஆனால் அதிலும் ஒரு தொல்லை உண்டு. ஒலிக்குறிப்புச் சொற்களைப் (Onamotopiac Words) பயன்படுத்தி விடுவது மட்டும் போதாது. அந்தச்சொல் பொருள் உடையதாகவும் அந்த இடத்தில் தரவேண்டிய விளக்கத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும். இம்மாதிரியான இடங்களில் இக் கவிஞர்கள் பயன்படுத்தும் சொற்கள் ஒசையால் (Phonetic) பொருள் விளக்கம் செய்பவை யாகவும், அகராதிப் பொருளால் (Semantic) பொருள் விளக்கம் செய்பவையாகவும் அமைய வேண்டும். இந்த இரண்டு பயன்களை யும் ஒருசேர விளைக்கும் சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்த கவிஞன், சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தும்