பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 24 பெரியபுராணம் - ஓர் ஆய்வு இயல்பை வெளிப்படுத்தும் இருவகைப் பொருளையும் தரும் சொற்களைத் தேர்ந்து கொள்வதே பெரிய ஆற்றலாகும். அதைவிடப் பெரிய ஆற்றல், அந்தச் சிறந்த சொற்களை எவ்வாறு அடுக்க வேண்டும் என்பதையறிந்து அடுக்கும் ஆற்றல். இந்தப் பாடலின் முதலடியை, 'நிகளத் தொடர் பாசத்தொடை முறியா பறியத்தறி என்று மாற்றிப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். எந்த ஒரு சொல்லையும் இடம் மாற்றினால் பாடலும் ஒசையும், ஏன்? பொருளுங்கூடச் செத்துவிடும். ஒசையை மாற்றுவதன் மூலம் விளைவு ஏற்படுத்துபவர் இரண்டாவது எழுத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் யானை வருவதைக் காட்டிய ஆசிரியர் முதல் எழுத்தில் அழுத்தம் தருவதன் மூலமும் அதற்கேற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றொரு பயன்விளைவை உண்டாக்குகின்றார். வண்டுகள் திடீரென்று கிளம்பி ஒரு திசை யில் வேகமாகச் செல்வதையும், அதே வேகத்தில் செல்லும் திசையை முற்றிலும் மாற்றிக்கொண்டு முன்னும் பின்னுமாகவும் பறப்பதையும் கண்டிருக்கலாம். அத்தகைய ஒரு பயன் விளைவைக் (effect) கொணர விரும்பிய ஆசிரியர் இதோ பாடுகின்றார்: குன்றுபோலுமணி மாமதில் சூழும் குண்டகழ்க்கமல வண்டலர்கைதை துன்று நீறுபுனை மேனியவாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச் சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு, திளைத்தெதிர் சென்றார். ' என்ற இந்தப் பாடலில் சொற்களின் முதல் எழுத்தில் அழுத்தம் தருவதன் மூலம் "சூம்" (Zoom) என்ற பயன் விளைவை ஏற்படுத் தலைக் காணலாம். "துன்று நீறுபுனை மேனியவாகித் தூய நீறுபுனை தொண்டர்கள் என்று தடித்த எழுத்தில் அழுத்தம் தந்து உரக்கப் படித்தால் பயன் விளைவைக் காணலாம். இளைஞராகிய திண்ணனாரைத் திடீரென்று அழைத்து அவருடைய தந்தையாகிய நாகன், 'எனக்கு மூப்பு வந்துவிட்டது!