பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 725 இந்த அரசை நீ ஏற்று நடத்துக' எனக் கூறுகிறான். இதனைச் சற்றும் எதிர்பாராத திண்ணனுடைய மனத்துள் இப்பொழுது என்ன செய்யலாம்? என்ற போராட்டம் நடை பெறுகின்றது. ஒன்றுக் கொன்று முரணானதும் மாறுபட்டதுமான எண்ணங்கள் மனத்துள் தோன்றுவதால் எந்த ஒரு நினைவையும் பற்றிக் கொண்டு முடிவான ஒரு கருத்துக்கு வரமுடியாமல் திண்டாடும் ஓர் இளைஞனுடைய எண்ண ஓட்டங்களை எவ்வாறு பாடலில் காட்ட முடியும்? நீளமான ஓசை தரும் நெடில்களை அதிகம் பயன்படுத்தாமல் அதிகச் சீர்களைக் கொண்ட பாடல்முறையைப் பயன்படுத்துகிறார். தந்தைநிலை உட்கொண்டு தளர்வுகொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சாய்வுதோன்ற வந்தகுறை பாடதனை நிரப்புமாறு மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு முந்தையவன் கழல்வணங்கி முறைமைதந்த முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக்கொண்டு சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத் திருத்தாதை முகமலர்ந்து செப்புகின்றான். ' என்ற இந்தப் பாடலில் பயன்படுத்தப்படும் சொற்களில் பெரும் பாலானவை குற்றெழுத்துக்களால் ஆனவை. எந்த ஒரு எண்ணமும் நீண்டு செல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வரும் மாறுபட்ட எண்ண ஓட்டங்களைக் காட்டப் பயன்படுத்தப் பெற்றுள்ள சொற்களாம் இவை. சொற்பொருள் ஒருபுறம் இருக்கச் சொற்களின் ஒசையை வகுப்பதன் மூலம் தனியான தொரு குறிப்புப் பொருளைத் தருமாறு செய்வதைத்தான் ஒசைப் பொருள் என்று கூறுகிறோம். திண்ணனின் மனத்துள் எழுந்த போராட்டத்தை இச் சொல்லடுக்கு நம் செவிவழியில் புகுந்து மனத்தில் படுமாறு செய்கிறது. திண்ணனார் வேட்டையாடுவதைக் கூறவரும் கவிஞர் ஒருவகைச் சந்தத்தைப் பயன்படுத்தி அந்தப் பயன் விளைவை ஏற்படுத்துகிறார். அதிலும் ஒரு புதிய சோதனையைச் செய்து பார்க்கிறார் என்றுதான் கருதத் தோன்றுகிறது. முதலாவது உள்ள பாடலில் வல்லினங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேட்டைச் சிறப்பைக் கொண்டு வருகின்றார். இரண்டாவ தாகக் காட்டப் பெறும் பாடலில் இடையின எழுத்துக்களைப் பயன்படுத்தி அதே ஓசையைக் கொண்டுவருவதன் மூலமும் பழைய பயன் விளைவை உண்டாக்குகிறார். .