பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்; வெடிபடவிரி சிறுகுருளைகள் மிசைபடுகொலை விரவார்; அடிதளர்வுறு கருவுடையன அனைவுறுபினை அலையார்; கொடியன எதிர் முடுகியும்.உறு கொலைபுரிசிலை மறவோர்.' 'தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா வாளிகளொடு குடல் சொரிதர மறிவனசில மரைமா நீளுடல்விடு சரம்உருவிட நிமிர்வன மிடை கடமா மீளிகொள்கணை படும்உடலெழ விழுவனபல உழையே.' 8 6 ஒசையினாலேயே பொருட்சிறப்பையும், சொற் சித்திரத்தை யும் உண்டாக்குவதில் சேக்கிழார் யாருக்கும் இளைத்தவரல்லர். திருநாவுக்கரசர் கயிலை யாத்திரை சென்ற பொழுது அவருடைய கால்களும் கைகளும் பயன்படாமற் போகவும் உருண்டு உருண்டும் தத்தித் தத்தியும் செல்கின்ற காட்சியைக் கவிஞர் தமக்கே உரிய முறையில் பாடுகின்றார். இங்குப் பயன் படுத்தப் பெறும் சொற்கள் தேர்ந்தெடுத்த குற்றெழுத்தை மிகுதியாகவுடைய சொற்களாகும். 'மார்ப முந்தசை நைந்து சிந்தி வரிந்த என்புமுறிந்திட நேர்வருங்குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடநீடு ஆர்வம் அங்குயிர் கொண்டு கைக்கும் உடம்படங்கவும் ஊன்கெடச் சேர்வ ரும்பழு வம்புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர். ' என்ற இப்பாடலைப் படிக்கும்போதே புரண்டு புரண்டு செல்கின்ற ஒரு முதியவர் நம் மனக்கண்ணில் தோன்றுகிறார். புகழ்ச்சோழ நாயனார் புராணத்தில் மன்னனுடைய படைகள் அதிகன் என்ற, மலையரணத்தையுடைய மன்னனிடம் போர்புரிதலைப் போகிற போக்கில் கவிஞர் காட்டிச் செல்கிறார். 'மலையொடு மலைகள் மலைந் தென அலைமத அருவி கொழிப்பொடு சிலையினர் விசையின் மிசைத்தெறு கொலைமத கரிகொலை உற்றவே.'