பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 727 வீடினார் உடலிற் பொழி நீடுவார் குருதிப் புனல் ஒடும் யாறென ஒத்தது கோடு போல்வ பிணக்குவை' 'வடிவே லதிகன் படைமா ளவரைக் கடிஆழ் அரணக் கணவாய் நிரவிக் கொடிமா மதில்நீ டுகுறும் பொறையூர் முடிநே ரியனார் படைமுற் றியதே." என்ற பாடல்களில் மூன்று வகையான சந்தங்கள் பயன்படுத்தப் பெற்று வெவ்வேறான பயன் விளைவுகளைத் தருதலைக் d35fTGððf 6UfTLD, - கவிஞன் சொற்களின் ஒசைப் பொருள், அகராதிப் பொருள் என்ற இரண்டையும் பயன்படுத்துவதன்மூலம் நாம் நினைக்க முடியாத ஒரு பயன் விளைவை ஏற்படுத்துகிறான். சொற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்குவதன்மூலம் அச் சொற்கட்குத் தனிப்பட்ட முறையில் இல்லாத பொருட் சிறப்பையும் அவை பெறுமாறு செய்து விடுகின்றான். . சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு வகை ஆற்றல். அவற்றைச் சிறந்த முறையில் அடுக்கிக் கவிதையில் இடம்பெறச் செய்தல் தேர்ந்தெடுப்பதைவிடப் பெரிய ஆற்றலாகும். சுந்தர ரைத் தம் அடிமை என்று வழக்குத் தொடுக்க வருகின்றார் கிழவேதியர். திருவெண்ணெய் நல்லூரிலுள்ள பஞ்சாயத்து அவையினர் அவ்வழக்கை விசாரிக்க முற்பட்டனர். நாட்டில் ஊரில் அன்றாடம் வரும் நூற்றுக்கணக்கான வழக்குப் போன்றது அன்று இக் கிழவேதியன் கொணர்ந்த வழக்கு. எனவே கிழவரை நோக்கி நீதிபதிகள், 'இவ்வுலகின் கண் நீயின்று இவரை உன் அடிமை என்ற வெவ்வுரை எம்முன்பு ஏற்றவேண்டும் என் றுரைத்து மேலும் தொடர்ந்து, 'ஆட்சியில், ஆவணத்தில், அன்றிமற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன ‘’ என்று பேசும் சொற்களை இடம் மாற்றினால் அடிப்படையே கெட்டுவிடும். உலகில் எங்கும் இல்லாத அழிவழக்குக் கொணர்ந்த ஒருவரிடம் இதற்கு ஆட்சி உண்டா? இதுபோல் யாரேனுஞ் செய்துள்ளனர்ா? என்று கேட்பதே பைத்தியக்காரத் தனம். அப்படியிருந்தும் இந்த நீதிபதிகள் ஏன் இவ்வாறு 48