பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு கேட்கிறார்கள்? இந்த முறைவைப்புத்தான் அவர்களின் சட்ட ஞானத்தை நமக்கு அறிவுறுத்தி நிற்கின்றது. அவர்களிடம் இந்த நேரத்தில் வந்துள்ள வழக்கு உலகில் வேறு எங்கும் அதுவரை வராததும், மரபில், பழக்கத்தில் இல்லாததுமான வழக்காக இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த மெய்மையை (fact) அறிந் திருந்தாலும் தம் சட்ட நீதிகளிலிருந்து வழுவத் தயாராக இல்லை. சட்டம் என்பது மூன்று நிலைகளில் ஆதாரம் கேட்கின்றது. முதலாவது மரபு, (Custom) பழக்க வழக்கம் (ஆட்சி என்பது இதுவே) என்பவற்றில் இவ்வழக்கினைச் சாத்திக் காண முடியுமா என்பதாகும். இன்றேல் அடுத்துள்ளது எழுத்து முறையில் வகுக்கப் பெற்றுள்ள சான்றுகளில் இதற்கு ஆதாரம் உண்டா என்பது ஆகும். இவை இரண்டும் இல்வழி, சாட்சிகள் என்பவர் களால் இதற்கு ஆதாரம் உண்டா என்று அறிய முற்படுவது மூன்றாம் வகையாகும். மரபு என்பது எழுத்துச் சான்றினும் Gualsold GL1jpg|TGjih. (Custom takes precedance over Written Law) இது இன்றும் நாகரிகமுடைய சமுதாய நீதிமன்றங் களில் ஏற்றுக்கொள்ளப்படுவதாகும். இதனால்தான் கவிஞரின் 'ஆட்சியில், ஆவணத்தில், அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில்' என்ற தொடரில் எந்தச் சொல்லின் முறை வைப்பை யும் மாற்ற முடியாது என்பதை அறிகின்றோம். திருநீலகண்டர் புராணத்தில் இதேபோன்ற நீதிபதிகள் பற்றிக் கூறும்பொழுது, ‘நல்லொழுக்கம் தலைநின்றார் நான் மறையின் துறைபோன்ார்' " என்று கூறுகையில் நடுவணர்கட்குச் சட்ட ஞானத்தைவிட நல்லொழுக்கமே இன்றியமையாது முதலில் வேண்டப்படுவதாகும் என்பதை அறிவிக்கின்றார். இயற்பகையாரைப் பொறுத்தமட்டில் எதிரே நிறபவர் 'உன் மனைவியை நாடி வந்தேன்’ என்று கூறியபொழுதுகூட அச் சொற்களால் அதிர்ச்சியடையாமல், இது எனக்கு முன்பு உள்ளது' என்று கூறுவது சாத்தியமாகின்றது. ஆனால் இச் செய்தியைக் கேட்ட அவர் மனைவியாரும் இதுபற்றி அதிர்ச்சி அடையவில்லை என்று கூறினால் அது அந்த அம்மையின் பண்பாட்டை இழித்துக்