பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக் காப்பியங்களின்தோற்றமும் வளர்ச்சியும் 3 8 3 தெரியவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. காப்பி யத்தைக் கற்பவர்களின் மனத்தை, கற்பனையை, மனச் சாட்சியைத் தொடும் வகையில் காப்பியப் புலவன் அறிவு புகட்டும் பணியைச் செய்யலாம். காப்பியத்தைக் கற்பவர்கள் அவன் கூறுவனவற்றை நம்ப வேண்டும் என்று புலவன் விரும்பினால் அறிவு புகட்டும் பணியை அவன் ஓரளவாவது செய்யாமல் இருக்க முடியாது எனவே காப்பியக் கவிஞர்கள் தம் நூலைக் கற்பவர்கட்கு அறிவு புகட்டி, ஊக்கந்தந்து அவர்கள் உயருமாறு செய்ய விரும்பினர். கவிதை என்பது ஒய்வு நேரத்தில் பொழுது போக்காகப் படித்து இன்புறுவதற்கு உரிய சாதனம் என்ற சாதாரண மக்களின் நம்பிக்கையில் இக் கவிஞர்கள் பங்கு கொள்ளவில்லை என்பது தெளிவு. எனவே தங்கள் பணி மிக மிக ஆழமானது என்றும் அதன் பயன் மக்களை மேலும் பண்புடைய வர்களாகச் செய்வது என்றும் இவர்கள் நம்பினர். இத்தகைய உயரிய நோக்கம் இருப்பினும் இவர்கள் கவிஞர் களாதலின் கவிதைச் சிறப்புடன் தம் படைப்பு இலங்கவேண்டும் என விரும்பினர். அறிவு புகட்டும் பணி மிகவும் வெளிப்படை யாகத் தெரிந்தாலோ, அளவிற்கு அதிகமாகப் போய்விட்டாலோ கவிதை இடிபடும். எனவே காப்பியக் கவிதை கற்பனைக்கு உரமிடுவதாக அமைவதுடன் மனிதனின் பல்வேறு பண்புகளைக் காட்டுவதுடன் அமைந்துவிடாமல் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும். இந்தக் காப்பியக் கவிஞர்கள் வாழ்க்கை, இயற்கை என்பவற்றை நன்கு அறிந்தவர்களாக இருந்தமையாலும் கவிதைக் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தமை யாலும், அக்கலைக்குத் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருந்தமையாலும் இவர்கள் வெறும் நீதி போதனை மட்டும் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால்கூட அவர்களால் அந்த அளவில் நின்றிருக்க முடியாது. அவர்கட்கு இயற்கையாக அமைந்த முன்னர்க் கூறிய இயல்புகள், அவர்களை யும் மீறிச் சிறந்த கவிதைகளைப் படைக்கும் செயலைத் தொடங்கிவிடும்.'" இலக்கியக் காப்பியம்பற்றி மேலும் பல கருத்துக்களை இற்றைநாள் மேனாட்டுத் திறனாய்வாளர் குறிக்கின்றனர். அவை அனைத்துமே தமிழ் இலக்கியக் காப்பியங்கட்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. எனினும் அக்கருத்துக்களுள் ஏற்புடைய சில வற்றை மட்டும் ஈண்டுக் குறிக்கலாம். இலக்கியக் காப்பியங்கள் உண்மையை நாடி உரைப்பனவாக இருத்தல் வேண்டும். உண்மை என்று கூறினவுடன் நம்மவர்களில்