பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7 29 கூறுவதாகும். எனவே கவிஞர் அருமையான ஒரு சொல்லைப் பயன்படுத்தி இந்த நிலை வராமல் தடை செய்கின்றார். 'கதுமெனச் சென்றுதம் மனைவாழ்க்கைக் கற்பின் மேம்படு காதலியாரை விதிமணக் குலமடந்தை இன்றுனை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன மதுமலர்க் குழல் மனைவியார் கலங்கி மனந்தெளிந்து பின் மற்றிது மொழிவார். ' என்ற இப்பாடலின் சொல்லாட்சி நின்று நிலைத்துக் காணத் தக்கதாகும். இயற்பகை மனைவியைப் பார்த்து 'விதிமணக் குலமடந்தை' என்று விளிப்பதன் பொருளாழத்தை நன்கு உணர வேண்டும். குலமடந்தை என்பதால் இவர் பலருக்குரிய பரத்தை அல்லர் என்பதும், 'விதிமண...மடந்தை' என்பதால் முறைப்படித் திருமணஞ் செய்து வந்தவர் என்பதும், பெற வைக்கின்றார் ஆசிரியர். இவை இரண்டில் ஏதேனும் ஒன்று இல்லாதவர் இவ்வாறு தரப்படுவதில் புதுமை இல்லை. இவை இரண்டும் இருப்பதாலேயே இதில் புதுமையும் வியப்பும் தோன்று கிறது! இனி அடுத்து 'இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்’ என்ற சொற்களையும் காணல்வேண்டும். மற்று ஒருவருடைய மனைவியை விரும்பும் ஒருவரைத் தவமுடையவர் என்று கூறலாமா? ஆனால் இவ்வாறு கூறுவதும், கூறாததும் நம்போன்று அதனைக் காண்பவர் உரிமையன்று. யாரிடம் இந்தத் தானம் கேட்கப் பெற்றதோ அவர் மட்டுமே இவ்வாறு கேட்பவர் உண்மை யில் தவசியா அல்லது கயவரா என்பதை முடிவு செய்ய வேண்டும். எனவே தான் வந்தவரைப்பற்றி இயற்பகை என்ன நினைத்தார் என்பதைக் கவிஞர் கூறுகிறார். இம் மெய்த்த வர்க்கு என்று இயற்பகை கூறுவதால். அவருடைய மனத்தில் இவ்வாறு கேட்கும் ஒருவர்பற்றி எவ்விதமான தவறான கருத்தும் தோன்றவில்லை என்று தெளிய வைக்கின்றார். அகங்கார மமகாரங்களைச் சுட்டவர்களே தொண்டர் என்ற பட்டியலில் இடம் பெறுவர். அப்படி இருக்க, இயற்பகையார் மனைவியைப் பார்த்து'இன்று உனை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன் என்று கூறுவது சரியா? கவிஞரின் புலமைக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும். கணவன் சொல்லைக் கனவிலும் மீறாத மனையாட்டியிடம் 'நான்தான் அவருக்கு உன்னைக் கொடுத்தேன்' என்று கூறிவிட்டால் அவர் அதனை மீறத் துணியார் அன்றோ? எனவே தான் நான் என்ற சொல்லைக் கவிஞர் இங்கு அற்புதமாகப் பயன்படுத்துகிறார்.