பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 30 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இனி இவ்வாறு கூறியவுடன் எந்தத் தமிழ்ப் பெண்ணும் அதனை ஏற்றுக் கொள்வாள் என்று கருதுவது தவறாகும். எனவே இவ்வாறு ஓர் அன்புள்ள கணவன் தன் மனைவியைப் பார்த்துக் கூறினால் அம்மனைவியிடம் இயல்பாக உண்டாகும் எதிர் நிகழ்ச்சி (reaction) எதுவாக இருக்கும்? மனங்கலங்கிப் பொறிதட்டிப் போகும் அல்லவா? பின்னர்த்தான் கூறுபவர் யார் என்ற சிந்தனை தோன்றி, தம் அன்புக் கணவர்தான் இவ்வாறு கூறினார் என்ற தெளிவு பிறந்தவுடன், எது எவ்வாறாயினும் அவர் ஆணையை நிறைவேற்ற வேண்டியதே தம் கடமை என்பதும், தம்முடைய விருப்பு வெறுப்புகட்கு இங்கு இடமே இல்லை என்பதும், அவ்வம்மையிடம் தோன்றிய எண்ணஓட்டங் களாகும். இதனைக் காட்டவே 'மதுமலர்க்குழல் மனைவியார் கலங்கி, மனந்தெளிந்து பின்னர்ப் பேசுகிறார் என்று பாடல் சொல்கிறது. . . இந்தத் தொடரில் உள்ள சொற்களில் 'மதுமலர்க்குழல் மனைவியார்' என்ற ஆட்சியையும் கவனிக்க வேண்டும். இயற் பகையார் இவ்வாறு கூறும்பொழுது அந்த அம்மையாருக்கு எழுபது வயது ஆகியிருந்தால், இச்செயலின் கொடுமை குறைந் திருக்கும். அவர் இளமையுடையவர் என்பதைக் காட்டவே இச் சொற்கள் பயன்படுத்தப் பெற்றன. சில இடங்களில் நல்லவர்கள் அளவு மீறிச் சோதிக்கப்படும் பொழுது படிக்கின்ற நமக்கேகூடச் சோதனை செய்பவரின் மேல் எல்லையில்லாத சினமும், வெறுப்பும் பிறப்பதுண்டு. அத்தகைய இடங்களில் சேக்கிழார் ஓரிரண்டு அற்புதமான சொற்களைப் பயன்படுத்திச் சினங் கொள்ளத் தேவை இல்லை என்பது போல் அறிவுறுத்துவார். தாம் ஒட்டைத் திருடவில்லை என்றும், தம் மன்த்தில்கூடக் களவுசெய்யும் எண்ணம் ஒரு சிறிதும் இல்லை என்றும் கதறியழுது மன்றாடும் திருநீலகண்டரிடம், 'காதல் உன் மகனைப் பற்றிக் குளத்தினில் மூழ்கிப்போ’ ’’ என்று கூறுகிறார் கிழவேதியர். இந்த இடத்தில் யாருக்கும் அந்தக் கிழவரிடம் சினம் மூளத்தான் செய்யும். எனவே கவிஞர் இவ்வாறு வற்புறுத்தியவன் யார் தெரியுமா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடை கூறுவார்போலச் சில சொற்களைப் பயன்படுத்துவது அவருக்கே உரிய சிறப்பாம்.