பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 73 I 'வளத்தினால் மிக்க ஒடு வெளவினேன் அல்லேன், ஒல்லை உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன்? உரையும் என்னக் களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப்பற்றிக் குளத்தினில் மூழ்கிப்போ என்றருளினன் கொடுமை இல்லான். ' என்ற இப்பாடலில் வேதியரைக் குறிக்கக் களத்து நஞ்சு ஒளித்து நின்றான்' என்று கவிஞர் கூறுவது நான்காவது அடியில் உள்ள 'கொடுமை இல்லான்’ என்ற தொடரை வலியுறுத்த வந்ததாகும். பிறரை வாழ வைப்பதற்காகத் தானே நஞ்சையுண்ணும் ஒருவன் தேவை இல்லாமல் நீலகண்டர் போன்ற ஒரு நல்லவருக்குக் கொடுமை இழைப்பானா? ஒரு நாளும் செய்யமாட்டான் என்பதைக் குறிப்பதற்காகவே இச் சொற்களைப் பயன்படுத்து தலை அறியலாம். அமர்நீதியார் வரலாற்றில் வந்த கிழவர், ஒரு துலைக் கோலில் ஒரு தட்டில் தமது கோவணம் ஒன்றை வைத்துவிட்டு மற்றொரு தட்டில் அமர்நீதியார் வேண்டுமான பொருளை எல்லாம் வைத்து எடை சரியாக நேர் நின்றவுடன் அவற்றைக் காணாமற்போன கோவணத்துக்கு ஈடாகப் பெற்றுக் கொள்ள ஒருப்பட்டார். ஆனால் அமர்நீதியார் எவ்வளவு செல்வத்தை வைத்தும் தட்டு நேராகவில்லை. இதை இறைவன் செயல் என்று விளக்கங் கூறி விட்டுவிடுவதால் தவறு இல்லை. ஆனால் சேக்கிழார் தருக்க ரீதியாக இதற்கு அமைதி கூற முற்படுகிறார். இறைவன் உயிர்கள் மீது வைத்துள்ள கருணை எவ்விதக் காரணமும் இல்லாமல், எவ்விதப் பயனையும் எதிர்பாராமல் அவனுடைய வள்ளன்மையின் அறிகுறியாக உள்ளது. அடியவர் களின் அன்பு, பிறவி எடுத்தமையால் அப் பிறவியைத் தந்த இறைவனுக்குக் கைம்மாறு செய்யும் நிலையில் அமைந்ததாகும். எனவே அவனுடைய அருளுக்கு இந்த அன்பு என்றுமே சமமாக ஆதல் இயலாத காரியம். இந்த வாதத்தைக் கவிஞர், 'முட்டில் அன்பர்தம் அன்பிடும் தட்டுக்கு முதல்வர் மட்டு நின்றதட்டு அருளொடும் தாழ்வுறும் வழக்கால் பட்டொடும் துகில் அநேககோ டிகளிடும் பத்தர் தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத்தட்டு.' 9 3 . என்று கூறுகிறார். இனி இறுதியாக இரண்டு தட்டுக்களும் சமமாக நின்றனவே, அப்பொழுது எவ்வாறு இந்த வாதத்திற்கு