பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3 2 பெரியபுராணம் - ஒர் ஆய்வு முடிவு கூற முடியும்? என வினவுவார்க்கு விடை கூறுவார்போல இதோ விடை கூறுகிறார்: 'இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் அடிமை பிழைத்தி லோமெனில் பெருந்துலை நேர்நிற்க என்று மழைத்தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித் தழைத்த அஞ்செழுத்து ஒதினார் ஏறினார் தட்டில்...' கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத் தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின்றது.அத் துலைதான். ' என்பதால் இறைவன் கருணைக்கு நேர் நிற்கக் கூடியது தூய அன்பர்தம் தொண்டு ஒன்று தான். தன்னலமற்ற தொண்டு செய்பவன் இறைவன் பணியையேசெய்தலின், இரண்டும் ஒன்றாக ஆகிவிட்டன எனத் தருக்க முறையில் சில சொற்களைப் பயன் படுத்தி விடை கூறிவிடுகிறார் கவிஞர். - பண் சுமந்த பதிகங்களின் விரிவுரை இக் கவிஞர்பிரான் தம் காப்பியத்தைப் பாடத் தொடங்கு முன்னர்த் தமிழ் இலக்கியக் கடலில் துளையமாடியவர் என்பது முன்னரே கூறப்பெற்றது. மூவர் முதலிகள் அருளிச் செய்த தேவாரங்களை எழுத்தெண்ணிப் படித்தவரான இக்காப்பியக் கவிஞர் அப்பதிகங்களில் வரும் சில சொற்கட்கும் பொருள் விரிப்பது கற்பார்க்கு வியப்பை நல்காமல் இராது. மதுரையில் அடியார் தங்கியுள்ள இடத்தில் தீவைக்கப்பட்டது. இதனைச் செய்வித்த அரசன் மேற் சினங் கொள்கிறார் புகலிவேந்தர். யாரோ கீழ்மக்கள் செய்த செயலாயினும் இத்தவறு அரசன் செம்மையாக ஆட்சி செய்யாத காரணத்தாலேயே நிகழ்ந்தது எனப் பிள்ளையார் நினைந்து பாடுகின்றார். அப்பாடலில், 'பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே. ’’ என்று நான்காவது அடி முடிகின்றது. பதினொரு பாடல்களை உடைய அந்த பதிகத்தில் இந்த முதற்பாடல் ஒன்றில் மட்டுமே 'பையவே' என்ற சொல் வருகின்றது. இந்த ஒரு சொல்லுக்கு விளக்கமாக, ஏன் பையவே என்று பாடினார்? என்ற கருத்தை விரித்துக் கவிஞர் ஒரு பாடலையே பாடி விடுகிறார்.