பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் 7.33 'பாண்டிமா தேவியார் தமதுபொற்பில் பயிலுநெடு மங்கலநாண் பாதுகாத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன் பால் அபராதம் உறுதலாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும் வெண்ணிறு வெப்பகலப் புகலிவேந்தர் தீண்டியிடப் பேறுடைய னாதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க என்றார். ' 'பையவே' என்ற அற்புதமான சொல் பிள்ளையார் தேவாரப் பதிகத்து ஒரே ஒரு முறை ஏன் இடம் பெற்றது என்பதற்கு ஒரு திறனாய்வு விளக்கமாக நான்கு காரணங்களை இக் கவிஞர் கூறு கிறார் என்றால் கவிதையில் வரும் சொல்லின் ஆற்றலை இக் கவிஞர் உணர்ந்தது போல் வேறு யாரும் உணரவில்லை என்று எளிதாகக் கூறிவிடலாம் பாண்டி நாட்டில் சமணர்கள் பட்டி மண்டப வாதத்தில் முற்படாமல் அனல்வாதம், புனல் வாதம் என்பவற்றில் மட்டும் ஈடுபட்டமையின் காப்பியப் புலவர்க்கு அவர்களுடைய சமயக் கோட்பாடுகளை வாதத்தின் மூலம் சாட வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. ஆனால் மதுரையிலிருந்து பிள்ளையார் மீண்டு வரும் பொழுது போதிமங்கை என்ற ஊரில் பெளத்தர்கள் எதிர்த்து வாதஞ் செய்ய முற்பட்டனர். திருஞான சம்பந்தர் புராணத்தில் பெளத்தசமயக் கொள்கைகளைத் தருக்க முறையில் சேக்கிழார் சாடுகின்றார். இப்பாடல்கள் அவருடைய கல்விப் பெருக்கத்தையும் நுண்ணிய வாதத் திறமையையும் எடுத்துக் காட்டும் சான்றுகளாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் புராணத்திலும் சாக்கிய நாயனார் புராணத்திலும் புத்த சமயக் கருத்துக்களை ஒரளவு விரிவாக எடுத்துக் கூறி அவற்றுக்கு மறுப்பையும் இக்காப்பியப் புலவர் பேசிச் செல்கிறார். சாக்கியர் புராணத்தில், 'செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லை என உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உண்ர்ந்து அறிந்தார். '