பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 34 பெரியபுராணம் - ஒர் ஆய்வு என்று புத்த சமய மறுப்புப் பேசுகையிலும் இக் கவிஞர் மிக நுணுக்கமான செய்தி ஒன்றைத் தெரிவிக்கின்றார். கடவுட் பொருளை ஏற்றுக் கொள்ளாத பெளத்தர்கள் அறிவு வாதம் பேசுபவர்கள். அறிவை மட்டும் நம்பி இருக்கும் அவர்கள் வாதத்தை மறுக்கப் புகுகின்ற கவிஞர் அவர்கள் அறிவு வாதத்தில் உள்ள குறைபாட்டைச் சாக்கியர் தம் அறிவால் அறிந்தார் என்று கூறவில்லை. அதன் எதிராக இறையருள் கூட்டுதலினால் உணர்ந்தார் என்று கூற முற்படுகின்றார். அறிவு வாதத்தை அந்த அறிவின் துணை கொண்டே மறுக்கவும் முடியும் என்று காட்ட முற்பட்ட கவிஞர், திருஞான சம்பந்தர் புராணத்தில் 12 பாடல்களில் பரபக்க வாதம் பேசுவதைக் காண முடிகின்றது. ’’ ஆதிசங்கர பகவத்பாதர் பெளத்த சமய மறுப்புக்குத் தம் கூர்த்த மதியைப் பயன்படுத்தி அற்புதமான முறையில் அத்வைத சமயத்தை நிறுவியுள்ளார். எனினும் அது வடமொழியில் அமைந்துள்ளதுடன், சைவ சமயவாதிகள் ஏற்க முடியாத ஒன்றாகவும் இருந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சைவசமய அறிவுவாதஞ் செய்யும் சாத்திரநூல்களின் முடிமணி யான சிவஞான போதம் தோன்றுவதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர்த் தோன்றியது பெரியபுராணம். சிவஞான போதத்தின் விளக்கவுரையாக அமைந்துள்ள சிவஞான சித்தியார்தான் முதன் முதலில் பரபக்க வழியில் பெளத்தம் முதலிய சமயங்களைக் கண்டனம் செய்துள்ளது. தமிழ் மொழியில் இதுவே முதல் நூல் என்று கூறலாம். ஆனால் இந்தச் சாத்திர நூல் தோன்றுதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னரே காப்பியப் புலவராகிய சேக்கிழார் இந்தப் பரபக்க வாதத்தை முதன்முதலில் புகுத்து கின்றார். எனவே சைவ சமய சாத்திர நூல்கட்கு இவர் முன்னோடியாக அமைகின்றார் என்று கூறினால் அது மிகை ஆகாது. - இனிய சொற்களை ஆள்வதில் மூவர் முதலிகள் ஈடு இணையற்றவர்கள். எனவே அவர்களுடைய தேவாரங்களில் வரும் சொல்லாட்சிகளில் ஈடுபட்ட காப்பியக் கலைஞர் கூடுமான வரை அத்தகைய சொற்கள் தம் காப்பியத்திலும் இடம் பெறுமாறு பாடுவது இயல்பேயாம். நாவரசர் தேவாரத்தில் வரும, - - -