பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் . 73.5 செய்ஞ்ஞன்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் மைஞ்ஞன்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞ்ஞன்று எரியும் விளக்கொத்த நீலமணிமிடற்றான் கைஞ்ஞன்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே' " என்ற பாடலில் செய்நின்ற, மைந்நின்ற, நெய்நின்ற, கைந்நின்ற என்ற சொற்களை செய்ஞ்ஞன்ற என்பது முதலாக ஒசை நயத் துடன் பயன்படுத்துகின்றார். நாலம் என்ற சொல் ஞாலம் என்று வருவது போல நகரத்துக்கு ஞகரம் போலியாக வருதல் உண்டா தலின் நாவரசர் இவ்வாறு பாடுகின்றார். இந்த மாற்றத்தால் விளையும் ஒசைநயத்தைக் கண்ட காப்பியக் கவிஞர் இதில் ஈடுபட்டு அதே நாவரசர் புராணத்தில் இச் சொல் போன்றே பிற சொற்களைப் பயன்படுத்துகின்றார். அவரைப் பொறுத்தமட்டில் பைஞ்ஞீலி என்றே ஊரின் பெயர் அமைந்திருத்தலின் அச் சொல்லை மோனையில் அமைத்து, பைஞ்ஞ் லியினில் அமர்ந்தருளும் பரமர்கோயில் சென்றெய்தி மைஞ்ஞ் லத்து மணிகண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து மெய்ஞ் ஞர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்மாலைகள் பாடிக் கைஞ்ளு டியதம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார். ' . என்று பாடுகின்றார். இங்கு மெய்ந்நீர்மை, கைந்நீடிய என்ற சொற்கள் முறையே மெய்ஞ்ஞர்மை, கைஞ்ஞ்டிய என மருவி வழங்கப் பெறுகின்றன. இதனால் பெறும் ஒசை நயம் ஒன்றுக் காகவே இவ்வாறு வழங்கப் பெறுகின்றது. இதே போன்று ஒசை நயம் சிறக்கும் சொற்களை ஆள்வதில் இக் கவிஞர் ஈடு இணை யற்றவர். 'பாட்டோவா மண்டபங்கள் 'ஆட்டோவா அணியரங்கு 'விழவோவா பயில் வீதி . 'உணவோவாத் திருமடங்கள் " 'அத்தராகிய அங்கணர் அன்பரை இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை ‘என்புருக மடுத்தெரித்தார் - இருவினையின் தொடக்கெரித்தார்

  • I (; 3

丑0强