பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பலர் நம்பக் கூடியவை நடக்கக்கூடியவை என்பவற்றையே நினைக்கின்றனர். இது தவறுடையதாகும். இவர்களால் நினைக்கப்படுபவை மெய்ம்மை (Facts) என்று கூறப்படுமே தவிர உண்மை (Truth) என்று கூறப்படுபவை அல்ல. இலக்கியக் காப்பியப் புலவர்கள் எவ்வளவு தூரம் தம் கற்பனைக்கும், பகற் கனவுக்கும் இடந்தந்து பாடினாலும் அவர்கள் காப்பியங் களின் உண்மை நாட்டத்திற்கு இவை ஊறு விளைவிப்பதில்லை எனக் கருதினர். தாம் நாடும் உண்மையை வலியுறுத்தக் கட்டுக் கதைகள், இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகள் என்பவற்றைப் பயன்படுத்தக் கவிஞன் பின் வாங்குவதில்லை. தொல்காப்பியனார் 'பொருளொடு புணராப் பொய் மொழி' என்று கூறும் இனத்தைச் சேர்ந்த கவிதைகட்கும் உண்மையை அலங்கார, உயர்வு நவிற்சிகளுடன் கூறும் கவிதை கட்கும் வேறுபாடு உண்டு. இவை இரண்டிலும் தோன்றும் கவிதைகள் பொய்ம்மொழி என்பதனாலோ உண்மை பேசுபவை என்பதனாலோ தம் சிறப்பில் குன்றுவதில்லை. ஆனால் எந்த நாட்டில் உண்மை அடிப்படையில் கவிதை தோன்றகிறுதோ, அந்த மக்களின் மத நம்பிக்கை உணர்வுகள் என்பவற்றுடன் அக் கவிதை தொடர்பு கொண்டிருந்தால் உறுதியாக அவர்களை அது பாதிக்கத்தான் செய்யும். ஒவ்வொரு நாட்டிலும் சமய, ஒழுக்கப் புத்துணர்ச்சி ஏற்படும் பொழுது கவிதையையும், காப்பியத்தையும் அப் புத்துணர்ச்சி இடைநிலைப் பொருளாகக் (Medium) கொண்டு வெளிப்படுகிறது. ஒழுக்கம் என்பது மக்களால் விரும்பி ஏற்கப்பட வேண்டுமானால் உண்மையை அடிப்படையாகக் கொண்டதும் மனிதப் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதுமான காப்பியங்களால்தான் அதனைச் செய்ய முடியும். மேனாட்டு இலக்கியங்களைப் பொருத்தவரையில் வர்ஜில் (Virgil) தான் இதனை முதலிற் கண்டார் என்று திறனாய்வாளர் கூறுகின் றனா. சமுதாய வளர்ச்சியில் காப்பியம் தோன்றும் காலம் இவற்றையடுத்து மற்றொரு முக்கியமான கருத்தையும் திறனாய்வாளர் கூறுகின்றனர். 'ஒரு சிறந்த காப்பியம் ஓர் இனத்தில் தோன்றுகிறது என்றால், அந்த இனம் ஒஹோ என்று வாழ்ந்த காலத்தில் அல்லது அதற்குரிய காரணம் விரிவாகப் பேசப்பெற்ற காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதற் கில்லை. அந்த இனமோ, அல்லது அப் பெருங்காரணமோ அருகி, அழிவை நோக்கிச் செல்கின்ற நேரத்திலுங் கூட அந்த