பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 385 இனத்தார்களிடம் ஒர் ஒப்பற்ற காப்பியம் தோன்றலாம் என்றும் கூறுகின்றனர். இம்மாதிரி நேரங்களில் தோன்றும் கவிஞன் அந்த இனம் அல்லது காரணம் ஒரு காலத்தில் அடைந்திருந்த பெரு நிலைக்கு எது அடிப்படையாக இருந்தது என்பதை அறிந்து அந்த அடிப்படை மீட்டும் நீடிக்க வேண்டும் என்ற கருத்தைக் காப்பியம் மூலம் வெளிப்படுத்துகிறான்." வரலாற்று வளர்ச்சி முறையில், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அழிவை எதிர்கொண்டு நிற்கும் சமுதாயத்தில், முழு ஆற்றலுடன் காப்பியம் தோன்றுகிறது. இன்று அந்தச் சமுதாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந் தாலும் முன்னர் ஒரு காலத்தில் 'ஒஹோ' என்று வளர்ந்து நின்ற சமுதாயம் தானே அது? எனவே சமுதாயத்தின் வீழ்ச்சிக் காலத் தில் தோன்றும் கவிஞன் அச் சமுதாயம் வளர்ந்து நின்ற காலத்தில் எந்த அடிப்படையில் வளர்ந்து நின்றது என்பதைத் தன் நுண்ணறிவினால் அறிந்து கொள்கிறான். இப்பொழுது தளர்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்திற்குப் பழைய அடிப்படை மிகவும் தேவைப்படுகிறது. இந்தப் பழைய அடிப்படையை இப் பொழுது வழங்கினால் குறைந்தபட்சம் இந்தத் தளர்ச்சியைத் தடுத்துவிடலாம்; ஒரு வேளை இந்தத் தளர்ச்சி நீங்கி வளர்ச்சி யும் ஏற்படலாம். இந்த மாபெருங் காரியத்தைத்தான் வீழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தில் தோன்றும் கவிஞன் செய்கிறான். இத்தகைய முயற்சியில் கவிஞன் ஈடுபட்டுக் காப்பியம் வடிக்கும்பொழுது அவன் எடுத்துக்கொள்ளும் கதை எதுவாயி னும் அது இரண்டாம் இடத்தைப் பெற்றுவிடுகிறது. மனித வாழ்வுபற்றி அந்தக் கவிஞன் என்ன கனவு கண்டு அதனைச் சித்தரிக்க முயல்கிறானோ, அந்தக் கனவே முதலிடம் பெற்றுவிடு கிறது. இராமகாதை அனைவரும் அறிந்த ஒன்றாயினும், கம்பன் அதனை வடித்த முறையில் புகுத்திய புதுமைகட்கும், கண்ட கற்பனைக்காகவுமே நாம் கம்பனில் ஈடுபடுகிறோம். காப்பியங்கள் பற்றிய இப்பொதுவான கொள்கைகளைக் கண்ட பிறகு தமிழில் உள்ள காப்பியங்கட்கு இப்பொதுக் கொள்கைகள் எந்த அளவு பொருந்தும் என்பதை அவரவர் ஆய்வுக்கு விட்டுவிடலாம். இந்த ஆய்வைப் பொறுத்தவரை, இக்கொள்கைகள் எந்த அளவுக்குச் சேக்கிழாருடைய பெரியபுராணத்துக்குப் பொருந்தும் என்று காண்பது கடமையாகும். முற்பகுதியில் சொல்லப் பட்டவை எல்லாக் காப்பியங்கட்கும் ஒரளவு பொருந்துமாதலின் அவற்றை விட்டுவிட்டுக் காப்பியத் தலைவன் வீரமுடையவனாக போர் புரிபவனாக அமைதல் வேண்டும் என்ற பழங்