பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கொள்கையை எடுத்துக் கொண்டால் இலக்கியக் காப்பியத்தில் தனிமனிதனுடைய வீரமோ, போரோ இடம் பெறவேண்டிய தில்லை என்ற திறனாய்வாளரின் புதிய கொள்கை பெரியபுராணத் திற்கும் பொருந்துவதாகும். அன்றியும் உடல் வீரம் காட்டிப் போர் புரிவதை மட்டும் வீரம் என்று கருதிய நிலை மாறி அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பிறர் துன்பந் துடைத் தல், ஒரு குறிக்கோளுக்காக வாழ்க்கை நடத்துதல் என்பவையும் வீரத்தின் சின்னங்கள் எனத் திறனாய்வாளர் கூறியுள்ளனர் என்பதும் குறிக்கப் பெற்றது. இவற்றையும் வீரத்தின் வெளிப்பாடாகவே இத் தமிழர் கருதினர். போராண்மையை விட ஊராண்மை சிறந்தது எனக் குறள் குறித்துச் சென்றது. உடல் வீரங்காட்டிப் பகைவனை அழிக்கும் வீரர்களைவிடப் பிறப்பிலேயே தம்மிடம் இயல்பாக அமைந்துவிட்ட தீய பண்பு களையும் பொறி புலன்களையும் அடக்குபவர்கள் பெரு வீரர் என்றே இத்தமிழர் கருதினர். x அக்கருத்துக்கு முழு வடிவு கொடுத்து அவர்களை வீரர் என்றே சேக்கிழார் குறித்துள்ளார். பற்றை நீக்கிக் குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் 'வீரம் என்னால் விளம்பும் தகையதோ' என்பது சேக்கிழார் வாக்காகும். எனவே இந் நுண்மையை விளங்கிக் கொள்ளாமையால் தண்டியலங்காரம் போன்ற நூல்கள் காப்பிய இலக்கணம் கூறத்தொடங்கி 'மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி ' என்று கூறுகின்றனவே தவிர, தம்மைத் தாமே வென்ற வீரர்களைப் பற்றி ஒன்றுங் குறிக்கவில்லை. தமிழில் சேக்கிழாருக்கு முற்பட்ட காப்பியங்கள் என்று இன்று நமக்குக் கிடைப்பன சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சூளாமணி, கம்பராமாயணம், சீவக சிந்தாமணி என்பனவாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டினது எனக் கூறப்பெறும் சிலம்பு, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை, ஆறாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய பெருங்கதை, ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பனுடைய இராம காதை, பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, சூளாமணி என்பவை பெரியபுராணத்துக்கு முற்பட்டவை. முதல் இரண்டு காப்பியங்களாகிய சிலம்பும், மேகலையும் 'தன்னேர் இல்லாத் தலைவனையோ, தலைவியையோ பெற்றுத் திகழவில்லை. சாதாரணக் குடிமக்களே காப்பியத் தலைவர்களாக உள்ளனர். இந்த இரண்டு காப்பியங்களிலும் போர் என்று கூறத்தக்கது எதுவும் இல்லை. செங்குட்டுவனுடைய வடநாட்டுப் போர்