பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 38 7 காப்பியத்துடன் ஒட்டாமல் இருத்தலினாலும், காப்பியத் தலைவனுக்கோ, தலைவிக்கோ எவ்விதத் தொடர்பும் கொள்ளா மையாலும் செங்குட்டுவன் போரைக் காப்பியத்துள் அடக்கல் இயலாது. அது இடைப்பிறவரலாம். மணிமேகலையில் அது தானும் இல்லை. இவற்றை அடுத்துவந்த தலையும் வாலும் இல்லாத பெருங் கதை, சூளாமணி, சிந்தாமணி ஆகியவை அரசர்களைத் தலைவர் களாகப் பெற்று அவர்கள் நிகழ்த்திய போர்களையும் ஒரளவு பேசுகின்றன. கம்பனது இராமகாதை, இராம-இராவணப் போரை மிக விரிவாகப் பாடுகிறது. இக் காப்பியங்களுள் எதுவும் இத் தமிழகக் கதையை அல்லது தலைவர்களைக் கொண்டு இலங்கவில்லை. இவை அனைத்துமே தமிழாக்கம் பெற்றதாக, அல்லது கதையை மட்டும் பெற்று முதல் நூல்போலப் (கம்பன் இராம காதை) பாடப் பெற்றவையாக அமைந்துள்ளன. சிலம்பும், மேகலையும் மட்டுமே இந்நாட்டுக் கதை, மாந்தரை ஏற்றுக்கொண்டு காப்பியமாக வெளிப்பட்டன. இரண்டு காப்பியங்களிலும் பொதுமக்களுள் ஒருவரே தலைவராய் அமைந்துள்ளனர். இதன் காரணம் யாதாக இருக்கும்? கரிகாலன், பதிற்றுப்பத்துச் செங்குட்டுவன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற மாமன்னர்கள் இத் தமிழ்கூறு நல்லுலகில்தானே ஆட்சி செய்து மறைந்தனர்? மதுரைக் காஞ்சியும், பட்டினப்பாலையுங் கொண்ட நெடுஞ்செழியன் மேலும், கரிகாலன் மேலும் காப்பியம் பாடி இருக்கலாமே? ஏன் தோன்றவில்லை? இவர்கள் மறைந்த பின்னர்த்தான் காப்பியம் தோன்றி வளர்ந்தது என்று கூறுவதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை. சிலம்பு போன்ற முழு வளர்ச்சி அடைந்த இலக்கியக் காப்பியம் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிற்று என்றால் இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த பாண்டிய, சோழர்மேல் காப்பியம் பாடியிருக்க முடியாதா? மதுரைக் காஞ்சியே பெருங்கதை போன்ற நடையுடைய ஆசிரியப் பாவால் இயன்றதுதானே? அந்த மாங்குடி மருதனார் காப்பியம் பாட விரும்பியிருப்பின் அவரால் முடியாது போயிருக்குமா? பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனா ரால் கரிகாலனைப் பற்றி ஒரு சிறு காப்பியம் பாடியிருக்க முடியாதா? மதுரைக் காஞ்சியின் தனித் தன்மை இவ்வினாக்களை ஆழ்ந்து சிந்தித்தால் சில உண்மைகள் விளங்காமற் போகா. மன்னர்களைப் புகழவே தோன்றிய