பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பெரியபுராணம் - ஓர் ஆய்வு பட்டினப்பாலையையும், மதுரைக் காஞ்சியையும் ஊன்றிப் படித்தால் ஓர் உண்மை தெற்றென விளங்கும். இவ்விரு மன்னரும் பெரு வீரர்கள், பல போர்கள் செய்து வெற்றி கண்ட வர்கள். இவர்களது வெற்றிகள் புறநானூறு போன்ற குறும் பாடல்களில் பேசப்படுவது உண்மைதான். பாண்டியனைக் குறுங்கோழியூர் கிழார் (17), குடபுலவியனார் (18,19), கல்லாடனார்(23, 25,37), மாங்குடிகிழார் (24,26,372) இடைக்குன்றுார் கிழார் (7 6,77,78,79), என்பவர்கள் பாடி யுள்ளனர். (வளை கோட்டில் உள்ள எண்கள் புறநானூற்றுப் பாடல் எண்கள்) இதில் ஒரு புதுமை என்னவெனில் மாங்குடி மருதனார் என்ற புலவர் பாண்டியனைப் பற்றிப் புறத்தில் மூன்று (24,26,372) பாடல்கள் பாடியுள்ளார். இதே புலவர் மதுரைக் காஞ்சி என்ற 782 அடிகள் கொண்ட நெடும்பாடலையும் பாடியுள்ளார். இப் புலவர்கள் பலரும் குறும்பாடல்களில் செழியனின் போர்ச் சிறப்பைப் பாடியுள்ளனர். சங்ககாலத்தில் புறப் பாடல்களில் காணப்படாத ஒரு புதிய செய்தியை முதல் முதலாக மாங்குடி மருதனார் என்ற புலவர் அவனைப்பற்றித் தாம் பாடிய மதுரைக் காஞ்சியில் கூறுகிறார். போர் செய்வது எவ்வளவு வீரமுடைய தாயினும், பயனில்லாத செயலாகும் என்ற கருத்தைப் பேசு கிறார். நேரிடையாக அவனைத் தாக்காமல் அவன் போர்த் திறத்தையும் பிற நற்பண்புகளையும் முதல் 205 வரிகளில் விரிவா கப் புகழ்ந்து கூறிய பிறகு, 'அன்னாய்! நின்னொடு முன்னிலை எவனோ? கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் " என்று தொடங்கி, 'படுகண் முரசம் காலை இயம்ப வெடிபடக் கடந்து வேண்டுபுலத்து இறுத்த பனைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர் கரை பொருது இரங்கும் கனையிரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே! உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே' என்ற திடுக்கிடும் கூற்றை வெளியிட்டு மேலே தொடர்கின்றார். சங்ககாலப் பெருமன்னர் யாரிடமும் எந்தப் புலவனும் துணிந்து முன்னின்று, 'இதுபோலப் பல வெற்றிகளைப் பெற்று மண்ணொடு மண்ணாய்ப் போன மன்னர்கள் கடல் மணலினும் பலராவர்'