பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை பூரீருத்திரம் பற்றிய விளக்கம் நான்கு வேதங்களில் ஒன்றாகிய யசுர் வேதம் ஏனைய ரிக், சாமம், அதர்வணம் ஆகிய மூன்று வேதங்களிலிருந்து சற்று மாறுபட்டதாகும். ரிக்கிலுள்ள பல மந்திரங்கள் சாம வேதத்தி லும் யசுர் வேதத்திலும் அப்படியே பெயர்த்து கூறப்பெற்றுள்ளன என்பது உண்மை தான். யசுர் வேதத்தைப் பொறுத்தவரை என்ன காரணத்தாலோ சுக்கிலயசுர் என்றும் கிருஷ்ணயசுர் என்றும் இரண்டு வடிவங்களில் உள்ளன. இவ்விரு வடிவங் களிலும் மந்திரங்களைப் பொறுத்தவரை சில மாறுபாடுகள் உள்ளன என்பதும் உண்மைதான். சுக்கிலயசுர் என்பது வட நாட்டில் பழக்கத்தில் உள்ளதாகும். கிருஷ்ணயகர் தென் மண்டலங்களில் பயின்று வருவதாகும். இப்பகுதியில் உள்ளவர் கள் யசுர் உள்பட ஏனைய வேதங்களை அத்யயனம் செய்து வருவதுபோல் வடபிராந்தியத்தில் பயிலப்படுவதில்லை என்ப தும் உண்மைதான். சரிகம; மகரிச என்ற நான்கு ஸ்வரங்களின் ஆரோகண அவரோகண கதியில் தென்மண்டலங்களில் பாடப்பெறுவது தனிச்சிறப்பாகும். வான்மீகி இராமாயணம் தென்மண்டலப் பிரயோகம் (Southern version) sul logiarl Golli | sg Gurræub (Northern verison) கிழக்கு மண்டலப் பிரயோகம் என்ற முறையில் மூன்று வகை யாகப் பிரிந்து வழங்குகின்றது. இவற்றுள் சிலபல இன்றியமை யாத வேறுபாடுகளும் உள்ளன. இராமாயணம் போன்ற இதி காசங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய யசுர் வேதத்தில் தென்மண்டலப் பிரயோகம், கிருஷ்ணயசுர் என்ற பெயரிலும் வடமண்டலப் பிரயோகம் சுக்கிலயசுர் என்ற பெயரிலும் பிரிந்து வழங்கியது சற்று புதுமையாகவே உள்ளது. இதன் காரணம் விளங்கவில்லை.