பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 7& 5 கிருஷ்ணயசுர் வேதத்தை,தைத்ரீய சங்கிதை என்றும் இதன் ஞான பாகத்தை தைத்ரீய உபநிடதம் என்றும் வழங்கலாயினர். இந்தக் கிருஷ்ணயசுர் வேதம் ஏழுகாண்டங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு காண்டமும் நான்கு முதல் பதினொரு பிரபாடகங்களாக வகுக்கப்பெற்று உள்ளது. ஒவ்வொரு பிர பாடகமும் 4 முதல் 20 வரை பல அநுவாகங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. நாம் ஆராய உள்ள பூரீருத்திரம் கிருஷ்ணயசுர் வேதத்தில் நான்காம் காண்டத்தில் ஐந்தாம் பிரபாடகத்தில் இறுதிப் பகுதி யாக அமைந்துள்ளது. பொதுவாக வேள்விகள் செய்யும் பொழுது மந்திரங்களை உச்சரித்து அவிசை அக்கினியில் சொரிவது மரபாகும். ஒவ்வொரு யாகத்திற்கும் ஒவ்வொரு வகையான மந்திரங்கள் பயன்படுத்தப்பெறும். அவிசு சொரிவது பொதுவான நிகழ்ச்சியாகும். இந்த யாகம் யாருக்குச் செய்யப் பெறுகின்றதோ, அத்தலைவனை முன்நிறுத்தி யாகம் செய்யப் பெறும். ரிக் முதல் யசுர் வரையுள்ள வேத வேள்விகளில் இந்திரன், வருணன் ஆகிய இருவருமே யாகத் தலைவர்களாகப் பேசப் பெற்று உள்ளனர். இந்த யாகங்களில் அவிசில் சொரியும் பல பொருள்களில் தூய்மையான பசுவின்பால் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பாலைத் தூய்மையான செம்பு அல்லது வெள்ளி ஆகிய உலோகங்களினால் ஆன பாத்திரங் களில் நிரப்பிக் கொண்டு வேள்வியில் சொரிவார்கள். பாலைப் போலவே நெய்யும் பயன்படுத்தப்படும்.பாத்திரங்களில் உள்ள பாலை அல்லது நெய்யை முகந்து அக்கினியில் சொரியும் கருவியாகப் பயன்படுவது மாமரத்தின் இலையாகும். சாதாரண மா இலை இந்நிகழ்ச்சிக்குப் பயன்படும் பொழுது 'சுரு' என்ற பெயரைப் பெறுகிறது. இங்குக் கூறம்பெற்றவை ஏறத்தாழ எல்லா யாகங்களுக்கும் பொதுவானவையாகும். ஒவ்வொரு யாகத்திற்கும் யாக குண்டங்களை அமைப்பதற்கு உரிய செங்கற் களை எப்படி எடுப்பது, எவ்வாறு சுத்தம் செய்வது, என்ன மந்திரங்களைச் சொல்லி எந்த முறையில் யாக குண்டமாக அமைப்பது என்பவற்றையெல்லாம் யாகத் தொடக்கத்தின் முன்னர் அநுவாகம் என்ற பெயரில் கூறப்பெற்றுள்ளன. யாகம் செய்யும் ஆச்சாரியன், அவன் எந்த திசையில் திரும்பி அமர வேண்டும், எத்தகைய ஆசனத்தில் அமர வேண்டும், எப்படித் தொடங்கி நடத்த வேண்டும் என்பவற்றையெல்லாம் விரிவாக 'பிராமணங்கள்' என்ற உரைநடைப் பகுதி விளக்குகிறது. வேதத்தில் கூறப்படும் ஒவ்வொரு யாகத்திற்கும் தனித்தனியே பிராமணங்கள் உண்டு. -