பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை - 787 திற்கே அங்கமாம் என்பது பொருந்தாதெனல் கொள்ளக் கிடந்தமை காண்க. மற்றும், அவ்வாறு கொள்ளினும் உருத்திர பரமேசுரனுடைய வழிபாடே இதன் பயனாம் என்பதும் உய்த் துணரற்பாலது. இதை ஆங்ளன என்று தொடங்கி, Iர்: `स् संहेिता तैतां प्रयुञ्जन् रुद्रं प्रीणाति ' वा'siripl (Upt-ॐड्छth अfrupGaugu। பிராமணத்திற்கு உரை கூறப்புகுந்து இவ்வுருத்திர சங்கிதையை ஒதுவதால் உருத்திரனுடைய அன்பை யுண்டாக்குக' என்னு மிடத்து, சாமவேத உருத்திரியின் உபோற்காதத்திற் கூறினாம் ஆண்டுக் காண்க. அவதாரிகை பதினொரு அதுவாகங்களையுடைய இந்தச் சதருத்திரீய மந்திரங்கள், 1234 பதங்களைக் கொண்டது. அவற்றுள் முதல் மூன்று ஹோமங்களுக்குரிய மந்திரங்கள் ஆயிரத்து நூற்றுத் தொண்ணுற்று நான்கு பதங்களைக் கொண்டவைகள். அவை களாற் செய்யப்படுவன மூன்று ஹோமங்களாம் ஆதலின், முன்னூற்றுத் தொண்ணுற்றெட்டுப் பதங்களாக, மூன்றாய்ப் பகுத்துக் கொண்டு, கருடசயனத்தில், முழந்தாள், நாபி, தலை என்னும் இடங்களில் பாலின் தாரையைப்பிடித்துக்கொண்டு அம் மூன்று ஹோமங்களைச் செய்தல் வேண்டும். முதல் ஹோமம் இங்கு வேட்போன், அfrf rஈள் என்பது முதலிய அருண மந்திரத்தால், முதலில், மகாக்கினி சயனத்தைத் தொடுதல் வேண்டும். வேட்போனுடைய இடமென்னும், ஐந்தாவது செங்கலடுக் கிற்கு அருகில் வடக்கு முகமாய் நின்றுகொண்டு, ஒரு மூங்கிற் கழியின் நுனியில் ஒரு எருக்கம் இலையை, சுருவைப்போல் வளைத்துக் கட்டிக்கொண்டு, அம் மூங்கிற் கொம்பின் அடியை வேட்போன் தனது முழந்தாளுக்குச் சரியாய் இருக்கும்படி வலக்கையாற் பிடித்துக்கொண்டு நிற்றல் வேண்டும்; அப்போது, மற்றொருவன், அந்த எருக்கம் இலை வழியாய்ச் சென்று, வடபக்கச் சிறகின் முதலாவது நுனிச் செங்கலின் மீது விழும்படி வெள்ளாட்டுப் பாலை இடைவிடாது வார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். அப்போது வேட்போன், மேல் வரும் முந்நூற்றுத் தொண்ணுாற்றெட்டுப் பதங்களால் ஒரு ஹோமஞ் செய்தல் வேண்டும்; அவற்றுள், இருநூற்று இருபத்திரண்டு பதங்களைக் கொண்டது இம் முதலநுவாகமாகும்.