பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 38 9 என்று கூறியதாக வேறு பாடல் எதுவும் இல்லை. எனவே புதுவழி ஒன்றை வகுத்துக் காட்டுகின்றார் மருதனார். சாதாரணச் சிற்றரசர்களிடம் இதனைக் கூறினால் அதனால் எப்பயனும் இல்லை. ஒரு மாமன்னனிடம், ஒயாது போர் செய்து அனைத்திலும் வெற்றி பெற்று இறுமாந்து இருக்கும் ஒருவனிடம் சென்று இவ்வாறு கூறுவது புதுமையிலும் புதுமை! தமிழ் மக்கள் வரலாற்றில் இது முற்றிலும் புதிய ஒரு திருப்பமாகும். 'போர் செய்வதால் பயனில்லை; இவ்வாறு செய்து வெற்றி பெற்று இன்று இருந்த இடம் தெரியாமல் போன மன்னர்கள் கடல் மணலினும் பலராவர்' என்று ஒரு மாமன்னன் எதிரிலேயே கூற வேண்டுமாயின் அந்தப் புலவனுடைய நெஞ்சுரத்தைக் கண்டு வியக்க வேண்டியுள்ளது! போர் புரிவதும் வெற்றி பெறுவதுமே வாழ்வின் குறிக்கோள் என்று கருதிய பண்பாட்டுக்கு விடை கொடுத்துப் புதிய திருப்பத்தை உண்டாக்கியவர் மருதனார். மேலை நாட்டுக் காப்பிய இலக்கியங்களில் வெறும் உடல் வீரத் தையும், தனி ஒருவனின் போர்த் திறத்தையும் புகழும் மரபை ட்டுப் புலனடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, தான் நம்பும் தெய்வங்களின் கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து நடத்தலும், வீரமே யாகும் என்ற கருத்தை முதன்முதலில் வெளியிட்டவர் "வர்ஜில்" என்ற கவிஞராவார். அவர் வாழ்ந்த காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுகளின் பின்னர்த் தோன்றியவர் மருதனார். அந்தக் கவிஞர்கள் தோன்றிய பகுதியிலிருந்து சேண் நெடுந்தொலைக்கு அப்பால் இருக்கும் இத் தமிழகத்தில் இத்தகைய புதிய கருத்தைப் புகுத்தினார். வர்ஜில் போன்றவர்கள் எந்த வீரனின் எதிரேயும் நின்று இக் கருத்தைக் கூறவில்லை. ஆனால் மருதனார் அந்நாளில் ஈடு இணையற்று விளங்கிய போர் வீரனா கிய ஒரு மாமன்னன் எதிரிலேயே இப் புதிய கருத்தை, அன்று வரை யாரும் எந்த மன்னனிடமும் நேர்நின்று கூறாத இக் கருத்தை வெளியிட்டு இந்தத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெருந் திருப்பத்தை உண்டாக்கினார். இதன்பிறகு இத்தமிழ் மன்னர்கட்கும் போர்ப் பைத்தியம் குறைந்திருத்தல் வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அதன் காரணத்தால்தான் வீரகாப்பியம் பாடும் இயல்பும் மறைந் திருக்க வேண்டும். இதன் விளைவாகவே குடிமக்கள் காப்பிய மாகச் சிலம்பும் மேகலையும் தோன்றினபோலும் உலகம், தொடர்ந்து தோன்றி மறையும் மக்கட் கூட்டம், இவைபற்றிச் சிந்திக்கத் தொடங்கியவுடன் தனிமனிதன் எவ்வளவு பெரிய மன்னனாயினும் தன் சிறுமையை அறிய நேரிடும். இந்த நிலையில் தோன்றிய காப்பியமே சிலம்பாகும். இன்று நமக்குக் கிடைக்கும்