பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 0 பெரியபுராணம் - ஓர் ஆய்வு ரிக்கிலும் தைத்திரீய சங்கிதையிலும் வரும் குறிப்புகள் இந்திரன் முதலானோர்களுக்குள்ள உயர்ந்த இடத்தை உருத்திர னுக்கு வேதம் அளிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள லாம். எந்த யாகத்திலும் ஏனைய தேவர்களைப் போல உருத்திர னுக்கு அவிசு வழங்கப்படவில்லை. யாகம் நடைபெற்ற இடத் தில் தரையில் சிந்திப்போன பொருள்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் உரிமை உருத்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. யாக பலிக்கென்று யாக ஸ்தம்பத்தில் கட்டப்பெற்ற பலி விலங்குகள் காயம்பட்டு விடுமேயானால் அவற்றைப் பலியிடும் வழக்கம் வேதத்தில் இல்லை. அவ்வாறு காயப்பட்ட விலங்குகள் உருத்திர னுக்கு உரியவை (ரிக் 2 மண்டலம், 33 பாடல், 5 வரி) என்று ரிக்வேதம் கூறுகிறது. ரிக்வேத காலத்தில் யாகங்களில் புறக்கணிக்கப்பட்ட உருத்திரன் ரிக்கிலும் பிற்பட்டுத் தோன்றிய யசுர் வேதத்திலும் புறக்கணிக்கப்பட்ட நிலையே காணப் பெறுகின்றது. எப்படியும் உருத்திரனுக்கு ஓர் இடம் தர வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி அதனைத் தவிர்க்க முடியாத நிலையில் பூரீருத்திரம் தோற்றுவிக்கப்பட்டதோ என்று நினைய வேண்டியுள்ளது. ரிக் வேதத்தில் காணப்படாத அளவுக்கு யசுர் வேதத்தில் உருத்திரன் நிலை ஒரளவு உயர்ந்து காணப்படுகிறது. நீலகண்டாய 2-0 என்றும் மிர்த்துஞ்சாய (எமனை ஜெயித்தவன்) என்றும். வேத மந்திரங்களால் போற்றப்பெற்றவராகவும் வேத முடிவில் வீற்றிருப்பவராகவும் உள்ள உமக்கு (6.1.8) என்ற மந்திரங்கள் அவனைப் போற்றும் நிலையில் அமைந்துள்ளன. முன்னர் காட்டப்பெற்ற உருத்திர வருணனைக்கும் இங்குக் காட்டப்பெற்றுள்ள உருத்திர வருணனைக்கும் உள்ள வேறுபாடு சிந்திக்கத் தக்கதாகும். ஏதோவொரு காரணத்தைக் கருதி பூரீருத்திரம் என்ற ஒரே பகுதியில் புகழ்ந்தும் பழித்தும் கூறப் படுவது எவ்வாறு, எப்பொழுது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. பூரீருத்திரத்தின் பொருள் இவ்வாறு இருக்க ஆகம முறையில் நிறுவி வழிபடப்படும் சிவாலயங்களில் பூரீருத்திரம் எப் பொழுது புகுந்தது என்ற வினாவிற்கு விடைகூற முடியாத நிலையில் உள்ளோம். இம்மந்திரங்களின் பொருளை அறியா மல் யசுர்வேதத்தில் உள்ளது என்ற காரணத்தால் ஒரு காலத்தில் இதனை ஏற்றுக் கொண்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. பெரியபுராணத்தில் காணப்பெறும் உருத்திர பசுபதி நாயனார் என்பவர் பூரீருத்திரத்தை ஜபம் செய்தே வீடு