பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 79 I பேற்றை அடைந்தார் என்ற வரலாறு பேசப்படுகிறது. மேலும் இந்நாயனார் விடியற்காலை நேரத்தில் குளத்திற்குச் சென்று கழுத்தளவு தண்ணிரில் இறங்கி, நின்று கொண்டு, கைகளை தலைமேல் குவித்துக் கொண்டு பூரீருத்திர மந்திரத்தை ஜபித்தார் என்று அந்நாயனாரின் புராணத்தில் ஆறாவது பாடலில் சேக்கிழார் விளக்கமாகப் பேசுகிறார். தெள்ளு தண்புன்ல் கழுத்தள வாயிடைச் செறிய உள்ளு றப்புக்கு நின்றுகை உச்சிமேற் குவித்துத் தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார் கொள்ளும் அன்பினில் உருத்திரங் குறிப்பொடுபயின்றார் (உருத்திர நாயனார் 6) இவ்வரலாற்றின்படி பார்த்தால் பூரீருத்திர ஜபம் செய் பவர்கள் கழுத்தளவு தண்ணிரில் நின்று கொண்டு செய்தார்கள் என்று நினைய வேண்டியுள்ளது. பூரீருத்திரம் இடம் பெற்றுள்ள யசுர் வேதப்படி பார்த்தால் இச்செயலுக்கு இங்கு இடமே இல்லை. 'கருட சயனம்’ என்ற யாகம் செய்கையில், அந்த யாகத்தில் உருத்திரனுக்கு அவிசு இல்லை என்ற காரணத்தால் யாகம் நடவாமல் உருத்திரன் இடையூறு செய்வான் என்ற அச்சத்தினால் அவனை மகிழச் செய்யும் வகையில் பூரீருத்திர வேள்வி செய்யப்பட்டது என்பதையும் வேள்விக்குப் பொருந் தாத முரண்பட்ட பொருள்களைக் கொண்டு இது நிகழ்த்தப் பெற்றது என்றும் அறிகிறோம். அதில் வரும் பல மந்திரங்களும் மனமார உருத்திரனைப் பாராட்டாதவையாக உள்ளன என்றும் அறிகிறோம். இது இப்படியிருக்கக் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு ருத்திரம் சொல்லுகின்ற வழக்கம் எப்பொழுது வந்தது என்று தெரியவில்லை. அதைவிட ஒரு புதுமையும் இக்காலத்தில் காண்கிறோம். ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறும் கோயில்களில் சிவபெருமானுக்கு அபிடேகம் செய்கையில் பூரீருத்திரத்தைச் சொல்லி சிவவேதியர்கள் அபிடேகம் செய்கின் றனர். கழுத்தளவு நீரில் நின்று உருத்திரம் சொல்லும் வழக்க மும், அபிடேகம் செய்கையில் உருத்திரம் சொல்லும் பழக்கமும் தமிழகத்தில் எப்பொழுது புகுந்தன என்பதை அறிய வாய்ப்பே இல்லை. வேத விருத்தம் (வேதத்தினும் மாறுப்பட்டது) என்று சொல்லப்படும் ஆகம அடிப்படையிலான கோயில் வழிபாட்டில் வேதம் புகுந்ததும் மிகப் பழங்காலத்தில் இருந்தே வேத ஆகமம் என்ற இரண்டையும் கூட்டி ஒன்றாகச் சொல்வதும் இந்நாட்டில் இருந்து வருகின்ற வழக்கமாகும். -