பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792 பெரியபுராணம் - ஒர் ஆய்வு இதுவரை பேசப்பெற்ற பூரீருத்ர விளக்கம் கிருஷ்ணயசுர் வேதம் என்று சொல்லப் பெறும் தைத்திரீய சங்கிதையில் நான்காம் காண்டத்து ஐந்தாம் பிரபாடகத்தில் காணப்பெறும் சதருத்திரீய யாகத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றியனவே ஆகும். இதன் எதிராக சிலபல மாறுபாடுகளைக் கொண்டு வடபுலத்தில் வழங்கும் சுக்ல யசுர் வேதத்திலும் பூரீருத்திரம் உண்டு என அறிகிறோம். அவ்வேதத்தின் பிற பகுதிகளைப் போல பூரீருத்திரப் பகுதியிலும் பல் மந்திரங்கள் மாறுபட்டுள்ளன என்றும் அறிகிறோம்.