பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 0 பெரியபுராணம் - ஓர் ஆய்வு நூல்களில் பழைமையான காப்பியமாயினும் தமிழில் முதலில் தோன்றிய இலக்கியக் காப்பியம் இதுதான் என்று கூறமுடியாது. இத்துணை வளமுடன் சிலம்பு இருக்குமேயானால் இதன் முன்னர்ப் பல காப்பியங்கள் தோன்றியிருத்தல் வேண்டும். புறப்பாடல்கள் வீரப்பாடல்களாக அமைந்திருத்தலின் வீர வணக்க அடிப்படையில் காப்பியங்கள் தோன்றியிருக்கவேண்டும். அதன்பின்னர் மதுரைக் காஞ்சியை அடியொற்றித் தனிமனித வீரத்துக்கு அதிக மதிப்புக் கொடாமல், மனிதப் பண்பாட்டுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில், காப்பியங்கள் தோன்றியிருத்தல் வேண்டும். அரசனுடைய வீரத்தை மட்டும் புகழ்ந்ததுபோக ஏனைய மனிதப் பண்புகளை அவனிடம் ஏற்றிப் புகழ்கின்ற மரபு தோன்றிவிட்டதையும் மதுரைக் காஞ்சி மூலம் அறிகின்றோம். 'அரசியல் பிழையாது அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது ' 'உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் போய்ச்சேண் நீங்கிய வாய் நட்பினையே’ ’’ 'தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னாய் விழுநிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே " 'அரிய தந்து குடியகற்றி பெரிய கற்று இசை விளங்கி முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன்மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்து பெற்ற நல்ஊழியையே ’’ என்ற அடிகள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. புறப்பாடல்கள் பலவற்றில் மன்னர்கட்கு அறிவுகொளுத்தும் பகுதிகள் இல்லாமல் இல்லை. குறுநில மன்னர்களைப் பற்றிக் கூறும் பாடல்களில் புகழும் பொழுது, அறிவு கொளுத்தல் வேறு. பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்ற மாமன்னன் ஒருவனிடம் குறுங்காப்பியம் என்று கூறத்தக்க முறையில் பாடப்படும் பாடலில் 'உன்னைப்போன்ற எத்தனையோ மன்னர்கள் இருந்த இடம் தெரியாமற் போய்விட்டனர். நீ வாய்மை உடையவனாக பிறர் பொருளுக்கு ஆசைப் படாதவனாக, கல்வி கேள்விகளிற்