பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 39 I சிறந்து உனக்கென்று வகுக்கப்பெற்ற வாணாளை நன்முறையில் கழிப்பாயாக’ என்று கூறுதல் அரிதினும் அரிது. இலக்கியக் காப்பியத்திற்கு முன்னர்க் கூறப்பெற்ற பல இலக்கணங்கள் இப் பாடலில் அமைந்து கிடக்கக்காணலாம். வீரச் செயல்களின் ஒரு வேண்டாத பின் விளைவு, அந்த வீரனின் அகங்கார வளர்ச்சியே யாகும். பல போர்களில் வெற்றி கண்ட ஒரு மன்னன் தன்னை ஒரு தெய்வமாகவே கருதிக்கொள்ளும் மனப்பான்மையைப் பெறுவது இயல்பேயாகும். இந்த நிலையில் அவனுடைய தயவை, அன்பை நாடுபவர்கள் அவனுடைய அகந்தைக்குத் தீனிபோடும் முறையில் உயர்வு நவிற்சி அணியில் அவனைப் புகழ்வது இயல்பே யாகும். இத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறு வானளாவப் புகழ்வது சங்க காலம்தொட்டே வளர்ந்துவிட்ட ஒன்றாகும். தமிழர்கட்கு இது ஒரு தேசியப் பண்பாடாக (National trait) வளர்ந்து இன்றுங்கூட அவர்களை விட்டுப்போக மறுக்கின்றது. இந்த அடிப்படையை மனத்துள் இருத்திக்கொண்டு பார்த்தால்தான் மாங்குடி மருதனார் என்ற தமிழ்க் கவிஞர் எவ்வளவு பெரிய புரட்சியைத் தமிழ் இலக்கிய உலகில் செய்துள்ளார் என்பதை உணரமுடியும். அமைதியாக அப் பெருமகன் செய்த புரட்சியின் பயனாகவே குடிமக்களைத் தலைவர்களாகக் கொண்ட சிலம்பும், மேகலையும் தோன்றின. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மருதனார் ஒரு திருப்பு மையமாக அமைந்துள்ளார் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இந்தப் புரட்சியை மனத்தில் வாங்கிக் கொள்ளாமல் நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சிக்கு உரை வகுத்து விட்டார். இதற்கு முன்னர் வீரகாப்பியங்கள் இருந்திருப்பினும் சாதாரணக் காப்பியமும் தோன்ற மதுரைக்காஞ்சி போன்ற நெடும் பாடல்கள் வழி வகுத்துவிட்டன. இந்த அளவு வளர்ந்துவிட்ட பிறகு சிலம்பு போன்ற குடிமக்கள் காப்பியம் தோன்றுவது இயல்பான வளர்ச்சியே யாகும். காப்பிய வளர்ச்சியில், சமயம் எவ்வாறாயினும் இடம் பெறும் என்று திறனாய்வாளர் கூறியுள்ளதை மேலே கண்டோம். அறிவு கொளுத்தல் எவ்வளவு இன்றியமையாததாய் அமைந்து விட்டதோ அதே முறையில் சமய போதனையும் இலக்கியக் காப்பியத்துள் நுழைந்துவிட்டது. பொதுவாக மேனாட்டாரும் சிறப்பாக இந்நாட்டாரும் இலக்கியக் காப்பியத்தைப் பொழுது போக்கு இலக்கியமாக என்றுமே கருதியதில்லை. இந்நாட்டைப் பொறுத்தவரை பயனில் சொல் பாராட்டக் கூடாது என்று அறநூல் விதித்துவிட்ட பிறகு வெறும் இன்பம் தருவதற்காக இலக்கியம் படைப்பது என்பது கனவிலும் கருதமுடியாத ஒன்றா 27